உள்ளாட்சி தேர்தல்: முதல் நாளில் 187 பேர் வேட்பு மனு தாக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2019
10:06

நாமக்கல்: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், 187 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.


தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளான மேயர், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல், 2016க்கு பின், இம்மாதம், 27, 30 என, இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தவிர, ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், ஐந்து நகராட்சி, 19 பேரூராட்சிகளுக்கு தேர்தல் இல்லை. தற்போது, 15 ஒன்றியம், 322 கிராம ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல், இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதில், நான்கு லட்சத்து, 22 ஆயிரத்து, 116 ஆண்கள், நான்கு லட்சத்து, 38 ஆயிரத்து, 749 பெண்கள், 31 பேர் இதரர் என, மொத்தம், எட்டு லட்சத்து, 60 ஆயிரத்து, 896 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 17, கிராம ஊராட்சி தலைவர், 322, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 172, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,575 என, மொத்தம், 3,086 பதவிக்கு, இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. நேற்று, வேட்புமனு தாக்கல் துவங்கியது. அதையடுத்து, மாவட்டத்தில், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வேட்பு மனுக்களை வழங்குவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கும், அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டன. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு, ஒன்று, ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, 23, கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 12, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 151 என, மொத்தம், 187 பேர், முதல் நாளன்று, அந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நாமக்கல் உள்ளிட்ட ஒரு சில ஒன்றியங்களில், கலெக்டர் மெகராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, 'அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டுள்ளதா, எத்தனை பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்' என்பது குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X