| 'தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்' Dinamalar
'தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 டிச
2019
10:08

நாமக்கல்: ''உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சிக்கும், தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்,'' என, நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி கூறினார்.


மேலும், அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து, தி.மு.க., மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சித்தால், அவர்களுக்கு தேர்தலில், மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். நாமக்கல் மாவட்டத்தில், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், 172 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, 2,200 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். அவர்களிடம், நேர்காணல் நடத்தப்பட்டு, ஒரு பதவிக்கு, 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள், அவற்றை பரிசீலித்து, இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவர். உள்ளாட்சி தேர்தலில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்து, கட்சி தலைமை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதையடுத்து, கூட்டணிக்கு ஒதுக்கப்படும் பதவிகளுக்கு, அ.தி.மு.க., வினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்ப பெறுவர். கிராம பஞ்., தலைவர் தேர்தலை பொறுத்தவரை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்சாயத்துகளிலும், அ.தி.மு.க.,வினர் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி ஆகியோர், இதுவரை எந்த அரசும் செய்யாத அளவிற்கு, தமிழகத்துக்கு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளனர். அந்த திட்டங்களை, மக்களிடம் எடுத்துக்கூறி, ஓட்டு கேட்போம். அனைத்து இடங்களிலும், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X