| ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்ய அனுமதி மறுப்பு? மன உளைச்சலில் மயங்கிய பட்டாச்சாரியாரால் பரபரப்பு Dinamalar
ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்ய அனுமதி மறுப்பு? மன உளைச்சலில் மயங்கிய பட்டாச்சாரியாரால் பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 டிச
2019
10:09

நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்ய அனுமதிக்காததால், மனஉளைச்சலில் பட்டாச்சாரியார் மயங்கி விழுந்தார்.


நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கடந்த வாரம், எஸ்.பி., அருளரசிடம் புகார் மனு அளித்தார். அதில், 'தன்னை பற்றியும், கோவிலை பற்றியும், அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியர் வெங்கடேசன், 52, அட்மினாக உள்ள, 'வாட்ஸ் ஆப்' குரூப்பில், இந்த அவதூறு பரவியதாக கூறப்படுகிறது. அதையடுத்து, உதவி ஆணையர், இது தொடர்பாக, அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதனால், பட்டாச்சாரியார் வெங்கடேசன் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே, நேற்று காலை வீட்டில் இருந்த வெங்கடேசன், திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், 'கடந்த, 4 முதல், கோவிலில் பூஜை செய்ய அனுமதி வழங்கவில்லை. அதனால், மன உளைச்சலில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக' குற்றம் சாட்டினார். இதுகுறித்து, உதவி ஆணையர் ரமேஷ், 45, கூறுகையில், ''வெங்கடேசன் அட்மினாக உள்ள 'வாட்ஸ் ஆப்' குரூப்பில், என்னை பற்றி தேவையில்லாத கருத்துகளை பதிவிட்டது குறித்து எழுத்து பூர்வமாக விளக்கம் கேட்டேன். ஆனால், பூஜை செய்யக் கூடாது என, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை,'' என்றார். இச்சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X