காதல் ஜோடி போலீசில் தஞ்சம் பெற்றோர் 'மனப் போராட்டம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
00:41

பெ.நா.பாளையம்:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்தவர் பரமன்; விவசாயி. இவருடைய நிலத்துக்கு அருகே முத்துவீரப்பன் வசிக்கிறார். பரமன் மகன் சரத்குமார், 23; கோவை துடியலுார் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். முத்துவீரப்பன் மகள் மணிமேகலை, 22. இவர், சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.


நேற்று முன்தினம், கோவிலில் திருமணம் செய்து கொண்டு, துடியலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, மணிமேகலையின் பெற்றோர், அவரிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி அவரை, காரில் ஏற்ற முயன்றனர்.இதைக்கண்டு, அச்சமடைந்த சரத்குமார், சத்தமிட்டு போலீசாரை அழைத்தார். பெற்றோரிடம் இருந்து மணிமேகலையை மீட்க முயன்றார்.


அதற்குள் போலீசாரும், இன்ஸ்பெக்டர் மீனாம்பிகையும் அங்கு விரைந்து வந்து மணிமேகலையை மீட்டு, அவரது, பெற்றோரை எச்சரித்தனர். மனப் போராட்டத்தில் தவித்த பெண்ணின் பெற்றோர் மணிமேகலையை தங்களுடன் அனுப்புமாறு போலீசாரிடம் வேண்டினர். அவர்களிடம், 'உங்களது மகள், சட்டப்படி திருமண வயதை அடைந்து விட்டார். அவரது திருமண முடிவில், யாரும் தலையிட முடியாது' எனக்கூறி, சரத்குமாருடன், மணிமேகலையை அனுப்பி வைத்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X