சட்டசபை குழுக்களின் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
01:17

புதுச்சேரி:சட்டசபை குழுக்களின் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை என, மதிப்பீடு மற்றும் பொதுக்கணக்கு குழு தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


புதுச்சேரி மின் துறையில் சீன ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் புகார் எழுப்பினர். அதையடுத்து, இது தொடர்பாக கடந்த 3ம் தேதி சட்டசபையில் மதிப்பீட்டு குழு கூட்டம் நடத்தி மின் துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மின்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்று ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பான் ஆவ ணங்களை பார்வையிடுவதென முடிவெடுக்கப்பட்டது.அதன்படி சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையில் உறுப்பினர்கள் நேற்று மின்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.


பொதுக் கணக்குக்குழு தலைவர் சிவா, உறுப்பினர்கள் தனவேலு, விஜயவேணி, வெங்கடேசன், அசனா, சங்கர் ஆகியோரும், அதிகாரிகள் தரப்பில் மின்துறை செயலர் தேவேஷ் சிங், கண்காணிப்பு பொறியாளர் முரளி, சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் அன்பழகன் பேசுகையில், அரசு துறைகள் சிறப்பாக செயல்படவும், முறைகேடுகள் மற்றும் வீண் விரயங்களை தடுக்கும் நோக்கத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பொது கணக்குழு மற்றும் மதிப்பீட்டு குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆனால் நாங்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் கிடைப்பதில்லை. பரிந்துரைகளுக்கும் நடவடிக்கை இல்லை என, தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில், 34 ஆயிரம் சீன ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கி பொருத்தப்பட்டுள்ளது. சாதாரண டிஜிட்டல் மீட்டர் ரூ.1400க்கு கிடைக்கும்போது, சீன ஸ்மார்ட் மீட்டரை ரூ.13,500க்கு ஏன் வாங்க வேண்டும். இது தொடர்பாக குழுவின் கேள்விகளுக்கு இதுவரை அதிகாரிகள் பதில் தரவில்லை.மின்துறையில் பொறியாளர்கள், லைன்மேன் உள்ளிட்ட 500 பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். மக்களுக்கு நெருக்கமான தொடர்புடைய மின்துறை அலட்சியமாக நடக்கக்கூடாது. மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் நடக்க வேண்டு என, பேசினார்.


அடுத்து பேசிய பொதுக்கணக்கு குழு தலைவர் சிவா, கடந்த மதிப்பீட்டு குழு கூட்டத்தில் வலியுறுத்தியது எதையும் செய்யவில்லை. ஸ்மார்ட் மீட்டர் வாங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தோம் செய்யவில்லை. புதுச்சேரியை ஆளும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் சட்டசபை குழுக்களின் அதிகாரம் பற்றி தெரியவில்லை. ஸ்மார்ட் மீட்டர் விளக்கு எரியாவிட்டாலும் மீட்டர் ஓடுகிறது. இதுகுறித்து குழுவின் பரிந்துரையை அமல்படுத்தவில்லை என்பதற்கு விளக்கம் தாருங்கள்.நான் பிப்டிக் தலைவராகவும் உள்ளேன். இதனால் தமிழக தொழில் அதிபர்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்குவது குறித்து என்னை சந்தித்து பேசுகின்றனர். அப்போது மின் கட்டணத்தை தெரிவித்தால் தமிழகத்தில் குறைவாக கட்டணம் வசூலிப்பதாக கூறுகின்றனர்.புதுச்சேரியில் மின் கட்டணம் குறைவு என்பது போய் புதுச்சேரியில் அதிகம் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளீர்கள் என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X