| எருமாடு பகுதியில் பதுக்கிய மணல் பறிமுதல் Dinamalar
எருமாடு பகுதியில் பதுக்கிய மணல் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 டிச
2019
01:48

பந்தலுார்:பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், கட்டுமான பணிகளுக்கு, தேவையான மணல் தற்போது வருவதில்லை. கூடுதல் விலை காரணமாக, கேரளாவிலிருந்து கொண்டுவரப்படும் பாறை துாளை கொண்டு, கட்டுமான பணிகள் நடக்கிறது.தற்போது மழை பெய்து, ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில், உள்ளூர் நபர்கள், ஆற்று மணலை எடுத்து, கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். அதில், எருமாடு அருகே, புளிங்குன்னு என்ற இடத்தில், ஆற்று மணலை எடுத்து, பைகளில் நிரப்பி, கடத்த தயார் நிலையில் இருப்பதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.வருவாய் ஆய்வாளர் காமு, உதவியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சென்று, ஆய்வு மேற்கொண்டதுடன், கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மணலை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்;ஆற்று மணலை எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X