| கரடி நடமாட்டம் Dinamalar
கரடி நடமாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 டிச
2019
01:49

குன்னுார:குன்னுார் அருவங்காடு பாலாஜி நகர், காந்தி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கரடிகள் நடமாட்டம் உள்ளது. இங்குள்ள ஹெத்தையம்மன் கோவிலில், அவ்வப்போதுவரும் கரடிகள் விளக்குகளில் உள்ள எண்ணெயை குடித்து செல்கின்றன. இந்நிலையில், அப்பகுதி சாலையில் அமர்ந்திருந்த கரடியை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.இந்தப் பகுதிகளில் தெரு விளக்குகள் எதுவும் எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுவதால் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X