குற்றப்பிரிவு ஆவணம் பராமரிப்பு: புலம்பும் சிட்டி போலீசார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
03:07

திருப்பூர்:திருப்பூர் சிட்டியிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், குற்றப்பிரிவு ஆவண பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக, போலீசார் புலம்புகின்றனர்.சிட்டி போலீஸ் லிமிட்டில், எட்டு சட்டம்-ஒழுங்கு ஸ்டேஷன், மகளிர், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் என, மொத்தம், 12 ஸ்டேஷன்கள் உள்ளன. ஸ்டேஷன் வாரியாக அன்றாடம் பதியப்படும் வழக்கு விவரங்கள், உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. அது, மாநகர குற்றப்பதிவேடு பிரிவில் பராமரிக்கப்படுகிறது.சில வாரங்களாக, நிலுவையில் உள்ள வழக்கு, பிடிவாரன்ட், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள வழக்கு, முடிக்கப்பட வேண்டிய 'பெட்டி கேஸ்' 'லோக் அதாலத்' மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நிலை என, ஏதாவது ஒன்றின் புள்ளி விவரங்களை, அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.ஒரு வேலை முடிவதற்குள், அடுத்து ஏதாவது ஒரு புள்ளி விவரங்களை கேட்டு உத்தரவு வருவதால், உடனே தயார் செய்து கொடுக்க முடியாமல் போலீசார் திணறு கின்றனர். ஸ்டேஷன் வாரியாக, கம்ப்யூட்டரில் வழக்கு குறித்து விவரங்களை பதிவு செய்து பராமரித்து வரும், ஒன்றிரண்டு பேரும், பணிச்சுமை காரணமாக விடுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது:சமீப காலமாக, பழைய வழக்குகள் குறித்த ஏதாவது புள்ளி விவரங்கள் சேகரிப்பு உள்ளிட்ட ஒரு பணியை அன்றாடம் போலீசார் மேற்கொள்கின்றனர். இதனால், ஸ்டேஷனில் வரும் மாற்று பணிகள் மீது கவனம் செலுத்த முடிவதில்லை. சில ஸ்டேஷன்களில், முறையாக ஆவணங்கள் பராமரிக்காத காரணத்தால், எந்த புள்ளி விவரம் கேட்டாலும் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.விவரங்களை சேகரிக்கும் போலீசார் பெரிதும் சிரமப்படுகின்றனர். குற்றப்பதிவேடு பிரிவு, உதவி கமிஷனர் அலுவலகம், ஸ்டேஷன்களில் உள்ள போலீசாரிடம் இல்லாத ஒருங்கிணைப்பும் முக்கிய காரணமாக உள்ளது.சிட்டியில் பதிவாகும் வழக்குகள் உட்பட விவரங்களை தினமும் வாங்கி, 'சிசிஆர்பி' என்ற குற்றப்பதிவேடு பிரிவில் பராமரிக்க வேண்டும். இதற்கு என, உதவி கமிஷனர் தலைமையில், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் உள்ளனர். ஆவணங்களை முறையாக பராமரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.'சிசிஆர்பி' பிரிவில், சொற்ப இலக்கிலேயே போலீசார் உள்ளனர். எனவே, இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், போலீசார் மத்தியில் ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறைந்து, பிரச்னைகளுக்கு உரிய தீர்வு ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X