ஓட்டுச்சாவடிக்கு எட்டு அலுவலர் தேர்தல் ஏற்பாடு சுறுசுறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
03:29

திருப்பூர்:ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சீட்டு முறை பின்பற்றப்படுவதால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், எட்டு ஓட்டுப்பதிவு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, திருப்பூர் மாவட்டத்தில், 1,704 ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. வேட்புமனு தாக்கல் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், தேர்தல் ஏற்பாடுகளும் துவங்கிவிட்டன.ஓட்டுச்சாவடிக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள் தயாராக உள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரானதும், 'போஸ்டர்' மற்றும் ஓட்டுச்சீட்டுகளும் அச்சிடப்படும். முன்னதாக, ஓட்டுப்பதிவு அலுவலர் நியமன பணி வேகமெடுத்துள்ளது.ஓட்டுச்சாவடியில், தலைமை ஓட்டுச்சாவடி அலுவலர்; வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, 'டோக்கன்' வழங்கும் அலுவலர், நான்கு ஓட்டுச்சீட்டுகளை வழங்கும் நான்கு அலுவலர், வாக்காளர் விரலில் மை வைக்கும் அலுவலர், ஓட்டுப்பெட்டி பாதுகாப்பு அலுவலர் என, எட்டு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில், 13 ஆயிரத்து, 630 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10 சதவீதம் பேர் கூடுதல் இருப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X