2வது நாளிலும் ஆர்வமில்லை வேட்புமனு தாக்கல் மந்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
03:38

திருப்பூர்:தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளதால், நேற்றும் மனுத்தாக்கல் சுணக்கமாகவே இருந்தது. மாவட்டத்தில் நேற்று, 74 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாம் நாளான நேற்றும், மனுத்தாக்கல் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஊராட்சி அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில், மனுத்தாக்கல் நடந்தது. முதல் நாளில், வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்கு என, 63 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.வரும், 16ம் தேதி வரை மனுத்தாக்கல், 17ல் பரிசீலனை, வாபஸ் அவகாசம் முடிந்து, 19ல் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். முதல்கட்ட தேர்தல், 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல், 30ம் தேதியும் நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, ஜன., 2ல் நடக்கிறது.இரண்டாம் நாளான நேற்று ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு எட்டு, ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு, 65 பேர் என, 74 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதால், கட்சியினர் வேட்புமனுவில் ஆர்வம் காட்டவில்லை. மாவட்டத்தில் இதுவரை, 114 மனுக்கள் மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முகூர்த்தத்துடன் கூடிய புதன்கிழமை என்பதால், இன்று அதிகளவில், மனுத்தாக்கல் செய்வர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.திருப்பூர் வள்ளிபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். காளிபாளையம், கணக்கம்பாளையம், மேற்குபதி, பெருமாநல்லுார், பொங்கு பாளையம், வள்ளிபுரம் ஊராட்சிகளில், நேற்று, 10 பேர் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தனர். ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. படிவங்களை மட்டும் பெற்று சென்றனர்.பல்லடம்பல்லடம் ஒன்றியத்தில், கரைப்புதுார், மற்றும் சித்தம்பலம் ஆகிய இரு ஊராட்சிகளுக்கான தலைவர் பதவிக்கு, 2 பேர், மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு, ஆறுமுத்தாம்பாளையம் 1, சித்தம்பலம் 1, மற்றும் வடுகபாளையம் புதுார் 1 என, மூன்று பேர் உட்பட, மொத்தம், 5 பேர் மனு தாக்கல் செய்தனர்.பொங்கலுார்பொங்கலுார் ஒன்றியத்தில், ேநற்று முன்தினம், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நான்கு பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளான நேற்று ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தலா இரண்டு பேர் வீதம் மொத்தம் நான்கு பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம், 8 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.அவிநாசி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அளவில் நேற்று, ஊராட்சி தலைவர் பதவிக்கு, நேற்று, யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை, புலிப்பார், செம்பியநல்லுார், பாப்பாங்குளம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, தலா, ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். ராமநாத புரம் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X