கைவிலங்குடன் தப்பிய கைதி சிக்கினார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
05:26

வடக்கு கடற்கரை: மண்ணடி, அங்கப்பன் சாலை, நடைபாதையில் தங்கி வந்தவர், அருண், 25; குப்பை சேகரிப்பவர். இவர், 8ம் தேதி, குடிபோதையில் இருந்தபோது, இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.அப்பகுதியில் இருந்தோர், இவரை நையப்புடைத்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கிருந்து, கைவிலங்குடன், அருண் தப்பினார். மண்ணடி தம்பு செட்டி தெருவில் பதுங்கி இருந்தவரை போலீசார் நேற்று, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.


வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு


பீர்க்கன்காரணை: புது பெருங்களத்துார், ஆர்.எம்.கே.நகர், சோழன் தெருவைச் சேர்ந்தவர், அஷ்டலட்சுமி, 28; மென்பொருள் நிறுவன ஊழியர். இவரது கணவர் வெளிநாட்டில் உள்ளார். அஷ்டலட்சுமி, நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு பணிக்கு சென்றுவிட்டார். நேற்று காலை, 8:15 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'லேப்டாப்', 6 சவரன் நகை, மொபைல் போன், 'ஐ - போன்' மற்றும் அமெரிக்க டாலர்கள் திருடப்பட்டது தெரியவந்தது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


போதை பொருள் விற்றோர் சிக்கினர்


ஆயிரம்விளக்கு: போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த, அமோஸ், 22, மற்றும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மன்வார் அன்சாரி, 23 ஆகிய இருவர் சிக்கினர். இவர்களை போலீசார் கைது செய்து, பின் சொந்த ஜாமினில்விடுவித்தனர்.


மொபைல் பறித்தோருக்கு வலை


ஜாம்பஜார்: திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அகமது அலி, 45. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் மகனுடன் வீட்டருகே உள்ள, டீக்கடைக்கு சென்றார். பின், வீடு திரும்பும்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் இருவர், அகமது அலியின் மொபைல் போனை பறித்து சென்றனர். ஜாம்பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


மூதாட்டியிடம் நகை பறிப்பு


மயிலாப்பூர்: மயிலாப்பூர், முண்டக கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், வத்சலா, 72; நேற்று முன்தினம் இரவு, இந்திராணியம்மாள் தெருவில் உள்ள, 'கிளினிக்' சென்று, வீடு திரும்பினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், மூதாட்டியின், 4 சவரன் செயினை பறித்து சென்றனர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


சாலை விபத்தில், 'பைக்' எரிந்து நாசம்


மாதவரம்: வியாசர்பாடி, எஸ்.ஏ., காலனி, 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சையது அபுதாகீர், 23; தொழிலாளி. இவர், நேற்று முன் தினம் நள்ளிரவு, மூலக்கடையில் இருந்து மாதவரம் நோக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, பொன்னியம்மன்மேடு அருகே, ஜி.என்.டி., சாலையில், முன்னால் சென்ற காரை, முந்த முயன்றார்.அப்போது, வேகம் காரணமாக, காரின் மீது உரசிய, இரு சக்கர வாகனம் கீழே விழுந்து, அபுதாகீர் பலத்த காயமடைந்தார். அப்போது, இரு சக்கர வாகன டேங்கில் இருந்து, பெட்ரோல் வழிந்து, தீ பிடித்து எரிந்து நாசமானது. அபுதாகீர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து, மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


சாலை விபத்தில் இருவர் காயம்


அண்ணாநகர்: அயனாவரம், அப்பாதுரை, 2வது தெருவைச் சேர்ந்தவர் ரோஷன், 24. இவர் போரூரில் உள்ள, தனியார் மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு காரில், அண்ணாநகர் சாந்தி காலனி வழியாக சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த இரண்டு, இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி, 29, முகப்பேரைச் சேர்ந்த அர்ச்சகர், வாசுதேவன், 49 ஆகியோர் காயமடைந்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். விபத்து குறித்து, அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X