சமூகத்திற்காக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும்! உற்சாகப்படுத்துகிறார் சமூக ஆர்வலர் சந்தானம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
05:39


தான் உண்டு, தன் வேலை உண்டு என, வாழ்வோர் மத்தியில், மக்கள் பிரச்னைகளுக்காக, 40 ஆண்டுகள் தொய்வின்றி போராடி வருவதோடு, பல எதிர்ப்புகளை கடந்து, குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கும், இளம் சமூக ஆர்வலர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார், குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சந்தானம், 82.


அவரிடம் உரையாடியதில் இருந்து:உங்களை பற்றி?


சொந்த ஊர் வந்தவாசி. குரோம்பேட்டைக்கு, 1968ல் வந்தேன். பன்னாட்டு நிறுவனத்தில், 38 ஆண்டுகள் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து, 2000ல் ஓய்வு பெற்றேன். மனைவி ஸ்ரீமதி, இரு மகன், ஒரு மகள் உள்ளனர்.சமூக பணி மீது ஆர்வம் ஏற்பட காரணம்?கடந்த, 1964ல், குரோம்பேட்டையில் நிலம் வாங்கினேன். துரதிருஷ்டவசமாக, அந்த நிலத்தை, அரசு கையகப்படுத்த நினைத்தது. அப்போது, முதல்வராக இருந்த அண்ணாதுரைக்கு மனு அனுப்பினேன்; பதில் இல்லை. 14 பதிவு தபால்களை அனுப்பியும், பதில் வரவில்லை.இறுதியாக, முதல்வர் பார்க்க விரும்புவதாக, தலைமை செயலகத்தில் இருந்து தகவல் வந்தது. மகிழ்ச்சியுடன் சென்றேன். அங்கு, அவரை சந்தித்தேன். ஒரு நிமிடம், என்னிடம் பேசினார். என் விடாமுயற்சியை பாராட்டியதோடு, நிலத்தையும் விடுவித்தார். அதுவே, சமூக பணிக்கு அஸ்திவாரமாக அமைந்தது.


எத்தனை ஆண்டுகளாக சமூக பணி செய்கிறீர்கள்?


நான் குரோம்பேட்டைக்கு வந்தபோது, மக்களுக்கான எந்த அடிப்படை வசதிகளும் அங்கு இல்லை.இது சம்பந்தமாக, நாளிதழ்களுக்கு எழுதுவது, அமைச்சர்களை சந்திப்பது, மக்கள் பிரதிநிதிகளிடம் மனு கொடுப்பது, நகராட்சியின் தொடர்பில் இருப்பது போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டேன்; இன்னும் செய்து வருகிறேன். 40 ஆண்டுகளாக தொய்வின்றி, சமூக பணியில்ஈடுபடுகிறேன்.


போராட்டங்கள் நடத்தியது உண்டா?


எண்ணிலடங்கா போராட்டங்களை நடத்தியுள்ளேன். குறிப்பாக, எம்.ஐ.டி., மேம்பாலம், பல்லாவரம் பாதாள சாக்கடை திட்டம், சொத்து வரி உயர்வு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்காக, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளேன்.சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் நாற்று நடுவது, கடவுளிடம் மனு கொடுப்பது, தலையில் கட்டு கட்டிக்கொண்டு முறையிடுவது, எருமையிடம் மனு கொடுப்பது போன்ற நுாதன போராட்டங்களும் இதில் அடங்கும்.


இத்தனை ஆண்டுகளில் சந்தித்த எதிர்ப்புகள்?


ஏரி ஆக்கிரமிப்பு, குரோம்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நிலம் பறிபோனது, அரசு மருத்துவமனையில் ஊழல், பாலில் கலப்படம் ஆகிய பிரச்னைகளின் போது, மக்களை திரட்டி, போராட்டம் நடத்தினேன்.அதன் விளைவாக, மூன்று முறை குண்டர்களால் தாக்கப்பட்டேன். 2003ல், கை, கால்கள் வெட்டப்பட்டு, மக்களின் ஆதரவால் உயிர் பிழைத்தேன்; என் இடது கால் ஊனமானது.அப்போது, 'தினமலர்'நாளிதழ், மூன்று முறை, என்னை பற்றி செய்தி வெளியிட்டது. என் மருத்துவ செலவிற்கு, 'தினமலர்' ஆசிரியர், 5,000 ரூபாய் அனுப்பினார். 'தினமலர்' நன்றியை என்றும் மறக்க மாட்டேன்.


தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்த காரணம்?


மத்திய அரசு அறிமுகப்படுத்திய, தகவல் அறியும் உரிமை சட்டத்தை, 2005ல், தமிழகத்தில் துவங்கியவுடன், அடுத்த நாளே பயன்படுத்த துவங்கினேன். இதுவரை, 2,000 மனுக்களை, மத்திய - மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளேன்.தகவல் அறியும் உரிமை சட்டம், மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இலவச வகுப்புகள் நடத்தி வருகிறேன். அச்சட்டத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே, என் விருப்பம்.


உங்கள் பணியில் சாதனையாக கருதுவது?


எம்.ஐ.டி., மேம்பாலம், பாதாளச் சாக்கடை திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்த, பெரும் பங்காற்றி உள்ளேன். குறிப்பாக, காந்தி யின் தமிழ் கையெழுத்தை வெளியில் கொண்டு வந்தது, வாழ்நாளில் மகிழ்ச்சி தரக்கூடிய முக்கிய சாதனை.ஒருமுறை, குரோம்பேட்டையைச் சேர்ந்த சீத்தாபதி என்ற முதியவர், காந்தி, தமிழில் கையெழுத்து போட்ட பேப்பரை, என்னிடம் கொடுத்தார். அதை, 'தினமலர்' நாளிதழுக்கு அனுப்பினேன். அவர்கள், செய்தியாக வெளியிட்டனர்.அதை பார்த்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு, என்னை தொடர்பு கொண்டார். நானும், சீத்தாபதியும் நேரிடையாக சென்று, காந்தியின் தமிழ் கையெழுத்து பேப்பரை ஒப்படைத்தோம். அதற்கு, விழா எடுத்தனர். அந்த கையெழுத்து, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இன்றும் உள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க காரணமாக இருந்தேன்.மனித உரிமை ஆணையம் மூலம் வழக்கு தொடர்ந்து, ஒரு செவிலியர் மற்றும் திருநீர்மலை பேரூராட்சி செயலர் அலுவலருக்கு அபராதம் விதிக்க செய்தேன். பாரதியார் சிலை அமைத்ததும், ஒரு சாதனை.


பெற்ற விருதுகள்?


இதுவரை, 14 விருதுகளை பெற்றுள்ளேன். பல அமைப்புகள், என் சேவையை பாராட்டி கவுரவித்துள்ளன. குறிப்பாக, காவல் துறை விருது; வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வழங்கிய - பிலோஷிப்; 98.4 எப்.எம்., வழங்கிய - ஹீரோ ஆப் பல்லாவரம்; 'எக்ஸ்னோரா' அமைப்பின் - சேவா ரத்னா; இந்திய மருத்துவர்கள் சங்க விருது ஆகியவை. மனைவி மற்றும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இல்லை என்றால், இதுசாத்தியமாகி இருக்காது.


உங்களுடைய அனுபவம்?


சுவையான, வேதனை தரக்கூடிய சம்பவங்கள் நிறைய உண்டு. ஆரம்பத்தில், தெருமுனை கூட்டங்களை நடத்தும்போது, அதைக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். சோர்ந்து போகாமல், ஒருவர் கேட்டால் கூட போதும் என்று பேசுவேன்.அந்த நிலைமை இப்போது இல்லை. பல நலச்சங்கங்கள் என்னிடம், கருத்துகளை கேட்கின்றன. சுற்றியுள்ள பகுதிகளில், ஏராளமான நலச்சங்கங்கள் உருவாக, நான் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறேன் என்பது, மறக்கமுடியாத அனுபவம்.


இளம் சமூக ஆர்வலர்களுக்கு உங்கள் கருத்து?


இளைஞர்கள், செய்தித்தாள்களை அதிகம் படிக்க வேண்டும். சுற்றி நடக்கும், அநீதிகளை பார்த்து, அமைதி யாக இல்லாமல், எதிர்த்து போராடுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு, இந்த சமூகம் ஒரு காரணம் என்பதை உணர்ந்து, சமூகத்திற்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். தேசம், மொழி, நாடு, பெற்றோரை நேசித்து, உங்கள் கடமையைசெய்யுங்கள்.இவரை பாராட்ட நினைத்தால்,94442 54850 என்றமொபைல்போன் எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X