| கண் பார்வையற்ற வி.ஏ.ஓ., தற்கொலை Dinamalar
கண் பார்வையற்ற வி.ஏ.ஓ., தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 டிச
2019
07:01

கும்மிடிப்பூண்டி:கண் பார்வையற்ற மாற்றுதிறனாளியான வி.ஏ.ஓ., துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


திருச்சி அடுத்த, குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் மகன் நிர்மல், 26. கண் பார்வையற்ற மாற்றுதிறனாளி. கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை பகுதியில், வாடகை வீட்டில் வசித்தபடி, கொள்ளானுார் கிராம, வி.ஏ.ஓ.,வாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டு ஜன்னலில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.'எழுத, படிக்க முடியாமல் சிரமப்படும் எனக்கு எதுக்கு, வி.ஏ.ஓ., வேலை' என, தந்தையிடம் அவர் கூறியிருப்பது தெரியவந்துள்ளது. அதனால், மன உளைச்சலில், அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X