கூலித்தொழிலாளி சாவில் மர்மம் போலீஸ் விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
08:40

ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, அவரது அண்ணனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பென்னிக்கலை சேர்ந்தவர் பசவன், 47; இவரது தம்பி முனிகிருஷ்ணன், 35. இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்குள், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் காயமடைந்த முனிகிருஷ்ணன், கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீடு திரும்பிய அவர், நேற்று காலை திடீரென உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய, உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
அப்போது, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தகவல் வெளியானதால், உத்தனப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். பசவன் மற்றும் முனிகிருஷ்ணன் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்படும் போது, முனிகிருஷ்ணன் உடலில் கத்தி வெட்டு ஏற்பட்டதாகவும், அதனால் அவர் இறந்திருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பசவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X