| குட்கா பொருட்களை கடத்திய 3 பேர் கைது Dinamalar
குட்கா பொருட்களை கடத்திய 3 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 டிச
2019
08:41

ஓசூர்: ஓசூர் அருகே, ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா (புகையிலை) பொருட்களை, காரில் கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ., ஜலந்தர் மற்றும் போலீசார், கோவிந்த அக்ரஹாரம் சர்க்கிள் பகுதியில், நேற்று வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த, டவேரா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. காரிலிருந்து மூன்று பேரை போலீசார் விசாரித்தனர்.
அவர்கள், கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜித்தேந்தர், 22, உக்காரம், 34, கிருஷ்ணகிரி குப்பண்ணா தெருவை சேர்ந்த முக்தியார், 30, என்பதும், அவர்கள் கர்நாடகாவிலிருந்து, புகையிலை பொருட்களை கடத்தியதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
ஓசூர், டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார், சீத்தாராம் மேடு, சீத்தாராம் நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலை, ரிங்ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, குட்கா பொருட்களை பெட்டிக்கடைகளில் விற்பனை செய்த, ஓசூர் முல்லை நகரை சேர்ந்த முருகன், 48, வ.உ.சி., நகரை சேர்ந்த மாரிமுத்து, 36, மேலுமலையை சேர்ந்த வஜ்ரவேல், 45, சாந்தி நகரை சேர்ந்த சின்னபையன், 42, ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த ராஜூ, 29, சுரேஷ், 42, சமத்துவபுரத்தை சேர்ந்த சிவா, 42, ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X