ஆவின் கூட்டுறவு சங்க மாஜி இயக்குனர்களிடம் விசாரணை:தலைவர் 'ஆப்சென்ட்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
08:48

ஆத்துார்: ஆவின் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில், 41 லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பாக, மாஜி இயக்குனர் ஏழு பேரிடம், கூட்டுறவு சார்பதிவாளர் விசாரித்தார். ஆனால், அப்போதைய தலைவர், விசாரணைக்கு ஆஜராகவில்லை.

சேலம் மாவட்டம், ஆத்துாரில், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளது. அங்கு, லாபத்தொகையிலிருந்து, பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. சேலம் கூட்டுறவு (பால்வளம்) தணிக்கை குழு அதிகாரிகள், பால் கொள்முதல், விற்பனை, வங்கி சேமிப்பு கணக்கு விபரம் குறித்து தணிக்கை மேற்கொண்டனர்.

அதில், 2015 - 16ல், 15 லட்சத்து, 53 ஆயிரத்து, 499 ரூபாய்; 2016 - 17ல், நான்கு லட்சத்து, 70 ஆயிரத்து, 467; 2017 - 18ல், 21 லட்சத்து, 9,262 என, 41 லட்சத்து, 33 ஆயிரத்து, 228 ரூபாய் நிதியிழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதற்கான ஆய்வறிக்கை விபரம், மாவட்ட ஆவின் நிர்வாகத்திடம், தணிக்கை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அத்தொகையை திரும்ப செலுத்த, அப்போதைய, அ.தி.மு.க., சேலம் மாவட்ட மருத்துவர் அணி துணை செயலர், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தலைவர் சுரேஷூக்கு, ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டது. அவர் தலைமறைவானதால், 2017, நவ., 2ல், துணைத் தலைவர் வெற்றிவேல், உள்பட அப்போதைய இயக்குனர்களிடம் விசாரணை நடந்தது.

தலைவர் சுரேஷ், 45, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வெற்றிவேலை தலைவராக நியமித்தனர். சங்க செயலர் ராஜா, 53, உடந்தையாக இருந்ததாக கூறி, அவரை பணம் செலுத்தும்படி கூறியதால், 2017, நவ., 20ல் அவர் தற்கொலை செய்து கொண்டார். தலைவராக பொறுப்பேற்ற வெற்றிவேல், 2018ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

நேற்று, சேலம் ஆவின் கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) சாந்தி தலைமையில் அலுவலர்கள், ஆத்துார் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் விசாரித்தனர். இதில், சங்க செயலராக இருந்த ராஜா மனைவி பூங்கொடி, முன்னாள் இயக்குனர்கள் சுப்ரமணி, பன்னீர்செல்வம், செல்வராஜ், ஆர்.செல்வி, முத்தரசன், தெய்வநாயகம், பிச்சை கனி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. தலைமறைவாக உள்ள, முன்னாள் தலைவர் சுரேஷ், இயக்குனர் எஸ்.செல்வி ஆகியோர் ஆஜராகவில்லை.

இதுகுறித்து, சாந்தி கூறுகையில், ''முறைகேடு தொகை குறித்து, செயலர் மனைவி, முன்னாள் இயக்குனர்களிடம் விசாரிக்கப்பட்டது. அவர்கள், சுரேஷ்தான் கையாடல் செய்ததாக கூறினர். இதுதொடர்பான விசாரணை அறிக்கை, மாவட்ட கூட்டுறவு அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X