களைகட்டியது!உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல்...குத்தாட்டத்துடன் குவிந்த சுயேச்சை வேட்பாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
23:53

உடுமலை:ஆதரவாளர்களுடன் ஊர்வலம், குத்தாட்டத்துடன், உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய, வேட்பாளர்கள் குவிந்ததால், வெறிச்சோடி காணப்பட்ட ஒன்றிய அலுவலகங்கள் நேற்று 'களைகட்டி' காணப்பட்டன.



உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு, டிச., 30ல், தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள், 26 ஒன்றியக்குழு, 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் 333 ஊராட்சி வார்டுகள் உள்ளன.குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள், 13 ஒன்றியக்குழு, 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள் மற்றும் 201 ஊராட்சி வார்டுகள் உள்ளன.



கடந்த மூன்று நாட்களாக இப்பதவிகளுக்கு, மனுத்தாக்கல் செய்ய பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இரு ஒன்றியங்களிலும், மொத்தமாக, பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, 30க்கும் குறைவாக இருந்தது. அதிலும், பெரும்பாலான மனுக்கள், ஊராட்சி வார்டு பதவிக்கே பெறப்பட்டிருந்தது.இந்நிலையில், பவுர்ணமியையொட்டி, வேட்பு மனுத்தாக்கல் களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.



இருப்பினும், உள்ளாட்சி தேர்தல் குறித்த கோர்ட் உத்தரவுக்காக அரசியல் கட்சியினர், காத்து இருந்தனர்.ஆனால், ஊராட்சித்தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு, சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டினர். அதே போல், கட்சிகள் மீதான அதிருப்தியில், ஒன்றியக்குழு வார்டுகளில், சுயேச்சையாக போட்டியிடுபவர்களும் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.



குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில், நேற்று காலை முதலே வேட்பு மனுத்தாக்கல் சுறுசுறுப்பு அடைந்தது. ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன், ஒன்றிய அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.தாரை, தப்பட்டை முழங்க, குத்தாட்டத்துடன் ஆதரவாளர்கள் அலுவலகம் முன் திரண்டதால், அப்பகுதியே திருவிழா போல மாறியது.



இதே போல், ஊராட்சி அலுவலகங்களிலும், வார்டு உறுப்பினர் பதவிக்கு, அதிகளவு மனுக்கள் பெறப்பட்டன.கடந்த மூன்று நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட, ஒன்றிய அலுவலகங்கள் நேற்று களை கட்டியது.போலீஸ் பாதுகாப்புவேட்பு மனுத்தாக்கலையொட்டி, ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருப்பினும், விதிமுறை மீறல்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.



வேட்பாளர்களுடன் வந்த அனைவருமே,குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்துக்குள் அனுமதிக்க பட்டனர். இதனால், அலுவலக வளாகத்திலும், அதிகளவு கூட்டம் இருந்தது. ஊராட்சித் தலைவருக்கான மனுக்கள் பெற தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்ததால், நெரிசல் தவிர்க்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்ற கோர்ட் உத்தரவு வெளியானதும், மனுத்தாக்கல் செய்ய வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X