| அரசு பஸ் மோதி இருவர் பலி Dinamalar
அரசு பஸ் மோதி இருவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 டிச
2019
03:55

திருப்பூர்:திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில், இருவர் பலியாகினர்.திருப்பூர், அண்ணா நகரை சேர்ந்தவர் அப்துல் கலாம், 21. போயம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு, 24. இருவரும், பாண்டியன் நகரில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் வேலை செய்து வந்தனர்.



இருவரும் நேற்று முன்தினம் இரவு, டூவீலரில் ஊத்துக்குளியில் இருந்து வந்து கொண்டு இருந்தனர். ஈரோட்டில் இருந்து, திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ், டூவீலர் மீது மோதியது. துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்த இருவரும் படுகாயமடைந்தனர். விஷ்ணு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அப்துல்கலாம் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X