அபாய கட்டத்தில் வேளாண் கட்டடம்: புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2019
04:02

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய அலுவலகத்தில், வேளாண், தோட்டக்கலைத்துறைக்கான கட்டடம் சிதிலமடைந்து படு மோசமான நிலையில் உள்ளது. விரைவில் புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.



ஆனைமலை ஒன்றியத்தின் பழைய அலுவலக வளாகத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகம் உள்ளது. தோட்டக்கலைத்துறைக்கு, இரண்டு அறைகள், வேளாண் துறைக்கு இரண்டு அறைகள் மற்றும் கிடங்குடன் கூடிய அலுவலகம் உள்ளன. இரண்டு சிறிய அறைகளைக் கொண்ட கட்டடங்கள் என்பதால், பத்து பேர் கூட அமர முடியாத நிலையில், அதிகாரிகள் இடநெருக்கடியால் சிரமப்படுகின்றனர்.



அலுவலகத்துக்கு வரும் விவசாயிகள் அமருவதற்கும் இடமில்லை.மேலும், சிறிய அளவிலான கிடங்கு என்பதால், உரம், விதைகள், இடுபொருட்கள், வேளாண்கருவிகள் வைக்க இடமில்லை. இதனால், இடுபொருட்களை அதிகாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கின்றனர்.வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்து உள்ளதால், தற்போது படு மோசமான நிலையில் உள்ளது. பக்கவாட்டு சுவர்கள், மேற்கூரையில் கான்கிரீட் பூச்சுக்கள் உதிர்ந்து, கம்பிகளும் சேதமடைந்துள்ளன.



மழைக்காலத்தில், மழைநீர் கசிந்து, செடிகள் வளர்ந்துள்ளது. கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதால், விவசாயிகள், அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென விவசாயிகள், அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வேளாண்துறையினர் கூறுகையில், 'தற்போது அலுவலகம் செயல்படும் இடத்திலேயே, 20 சென்ட் அளவுக்கு ஒன்றியத்திடம் இருந்து இடம் பெற்று, புதியதாக, 1.5 கோடி ரூபாய்க்கு அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.'புதிய அலுவலகம் கட்ட மாவட்ட கலெக்டரிடம் இருந்து ஒரு மாதத்திற்குள் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும், ஒன்றியத்திடம் இருந்து இடம் பெற்று, அலுவலகம் கட்டப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X