உளுந்து சாகுபடி: விதைச்சான்று அதிகாரி ஆய்வு: விவசாயிகளுக்கு அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2019
04:12

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, உளுந்து சாகுபடி செய்துள்ள விளைநிலத்தில், மாவட்ட விதைச்சான்று அதிகாரி ஆய்வு செய்தார்.



பயறு வகை பயிர்களில், உளுந்து பயிர் குறைந்த நாளில்,அதிக மகசூல் தருவதால், விவசாயிகள் இந்த சாகுபடியில் ஈடுபாடு காட்டுகின்றனர். மடத்துக்குளம் தாலுகா பகுதியிலுள்ள உளுந்து சாகுபடி விளைநிலங்களில் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.



மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் கூறியதாவது: தமிழ்நாட்டில், 8.75 ஹெக்டர் பரப்பில், 5.85 லட்சம் மெட்ரிக் டன் பயறு வகை பயிர் உற்பத்தி செய்யப்படுகிறது. பிற தானியங்கள், எண்ணை வித்துக்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகை உற்பத்தி திறன் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மானாவாரி பயிராகவோ, கலப்பு அல்லது ஊடுபயிராகவோ சாகுபடி செய்யப்படுகிறது.



சான்று பெற்ற விதைகளைக்கொண்டு தனி பயிராக சாகுபடி செய்து, இதற்குரிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயறுவகை பயிர் உற்பத்தியை பெருக்க முடியும். இந்த வகை சாகுபடியில், உளுந்து முக்கியமானதாகும். குறைந்த நாளில், அதிக மகசூல், நிறைவான வருவாய் வழங்குவதால், விவசாயிகள் விருப்ப பயிராக உளுந்து உள்ளது.



இதில், வம்பம் 5,6,8, கோ 6 ரக விதைகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். மடத்துக்குளம், உடுமலை பகுதி விவசாயிகளின் தேர்வாக, வம்பன் 8 ரகம் உள்ளது.விதைப்பண்ணைகள் அமைக்கும் விவசாயிகள், வம்பன் 8 ரகத்தை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். சாதாரண விதைப்பு செய்ய, ஏக்கருக்கு, எட்டு கிலோவும், வரிசை நடவுக்கு, ஐந்து கிலோவும் போதுமானது.



இதைப்பயன்படுத்துவதால், முளைப்புத்திறன் அதிகரித்து பயிர்கள் சீராக வளரும். ஒரு செடிக்கு, 55 முதல், 70 காய்கள் உற்பத்தியாகும். ஒரு காயில், 8 விதை வரை இருக்கும். இதனால், இரண்டரை ஏக்கருக்கு ஒரு மெட்ரிக் டன் வரை மகசூல் கிடைக்கும்.இவ்வாறு, மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறினார். ஆய்வின் போது, விதைச்சான்று அலுவலர் ஷர்மிளா, உதவி விதை அலுவலர்கள் பிரகாஷ், ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X