| வங்கியில் பணம் எடுத்துச்சென்ற வாலிபரிடம் ரூ.1.90 லட்சம் வழிப்பறி Dinamalar
வங்கியில் பணம் எடுத்துச்சென்ற வாலிபரிடம் ரூ.1.90 லட்சம் வழிப்பறி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 டிச
2019
04:20

மரக்காணம்:மரக்காணத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்துச் சென்ற வாலிபரிடம் 1.90 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 42; கோழிப்பண்ணை உரிமையாளர். இவர், நேற்று மதியம் மரக்காணம் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து 1.90 லட்சம்ரூபாயை எடுத்துக் கொண்டு, பைக் டேங்க் கவரில் வைத்துவீட்டிற்குச் சென்றார்.இவரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் பைக்கிலிருந்து கோவிந்தராஜை கீழே தள்ளிவிட்டு அவரது பைக்கில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X