பஞ்சர் ! கடலூரில் நகராட்சி சாலைகள்...சீரமைக்க நடவடிக்கை தேவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

13 டிச
2019
05:12
பதிவு செய்த நாள்
டிச 13,2019 00:51

கடலுார்:மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு கடலுார் நகர சாலைகள் சேதமடைந்து யானை பிடி பள்ளங்களாக மாறியுள்ளன.



நகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.கடலுார் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. ஒன்னரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நகரம் முழுவதும் 923 தெருக்கள் உள்ளன. அதில், 223 கி.மீ., தார் சாலைகள், 78 கி.மீ., பீ.டி., சாலைகள், 71 கி.மீ., சிமென்ட் சாலைகள் உள்ளன. இதில், நகர சாலைகளில் ஆங்காங்கே பாதாள சாக்கடைக்காக போடப்பட்ட மேன் ேஹாலில் இருந்து தண்ணீர் வழிந்து, சாலைகளில் தேங்கி பாழாக்கி வருகின்றன.



கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சாலையை வெட்டி, குழாய் புதைக்கப்பட்ட பள்ளங்கள் இன்னும் சரியாகவில்லை. பாதாள சாக்கடை திட்டத்திற்காக வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதாக கூறி சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டி, சின்னா பின்னமாக்கியுள்ளனர். டெலிபோன் கேபிள் புதைப்பதற்காக பள்ளம் தோண்டியது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பல இடங்களில் சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டி குழாய் பதித்து, அதனை சரிவர மூடி சிமெண்ட் பேக் செய்யாமல் விட்டுள்ளது.



போதாக்குறைக்கு மின்சார கேபிள் புதைப்பதற்காக சாலையின் நடுவே வெட்டிய பள்ளம் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இது போன்று நகர சாலைகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, சரி வர மூடாமல் உள்ளது. சாலைகள் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்தும் கந்தலாக மாறிவிட்டன. குறிப்பாக, பாஷியம் ரெட்டி தெரு, மாணவ மாணவியர்கள் செல்லும் செயின்ட்ஜோசப் கல்லுாரி சாலை, உப்பலவாடி சாலை உள்ளிட்ட பல போக்குவரத்து மிகுந்த சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே யானை பிடி பள்ளங்கள் உருவெடுத்துள்ளன.



நடப்பு ஆண்டு பெய்த கனமழையினால் கடலுார் நகர சாலைகள் பெரும் பாதிப்பிற்குள்ளானது. இதனால், கடலுார் நகர சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறியுள்ளன. பல இடங்களில் சாலைகள் இருந்ததற்கான சுவடே தெரியாமல் மண் சாலைகளாக மாறிவிட்டன.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தினசரி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.



மழைவிட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், கடலுார் நகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடிக்காமல் சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X