கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்து தொழிலாளி பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2019
04:21

கோவை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம், 38. கட்டுமான கூலித்தொழிலாளி. கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த அக்., 18-ம் தேதி, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பணியின் போது இரண்டாவது மாடியில் இருந்து, தவறி கீழே விழுந்தார்.இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது. முதலில் தனியார் மருத்துவமனையிலும் பின், கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சடலத்தை வாங்க மறுத்து, செல்வத்தின் உறவினர்கள், தமிழ்நாடு கட்டுமான தொழிற்சங்க உறுப்பினர்கள், கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.செல்வத்தின் உறவினர்கள் கூறுகையில், 'கான்ட்ராக்டர் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. இதனால் தான் செல்வம் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, உறவினர்கள் சடலத்தை பெற்றுச் சென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X