தெரிஞ்சுக்கோங்க! உணவில் கலப்படம் கண்டறிய பயிற்சி வகுப்பு நடத்த முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

13 டிச
2019
06:42
பதிவு செய்த நாள்
டிச 13,2019 04:28

கோவை:சமீபகாலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, தீவிரமாக களமிறங்கியுள்ளது உணவு பாதுகாப்புத்துறை. கலப்படத்தை கண்டறிய, நேற்று கோவையில் அரசு டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பால், டீ, சர்க்கரை, பருப்பு, தேயிலை...இப்படி எதை எடுத்துக் கொண்டாலும், அதில் இன்று கலப்படம் அதிகரித்து விட்டது.



இதனால் புதுப்புது நோய்களால், மக்கள் அவதியுறுகின்றனர்.இதை தடுக்க, அரசு மிகவும் தாமதமாக கண் விழித்துக் கொண்டாலும், இன்னும் இது குறித்த விழிப்புணர்வு போதாத நிலையே காணப்படுகிறது.டாக்டர்களுக்கு பயிற்சிஇந்நிலையில், உணவுப் பொருள் கலப்படத்தை கண்டறிதல் மற்றும் தடுக்கும் நோக்கத்துடன், அரசு டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது.அதன்படி, கோவை மாவட்டத்தில் பணியாற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், கூடுதல் வட்டார மருத்துவ அலுவலர்கள் என, 60 அரசு டாக்டர்களுக்கு, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.



வெல்லம், தேன், பச்சை பட்டாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களில், எளிய முறையிலும், விரைவிலும், எப்படி கலப்படத்தை கண்டறிவது என்று செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும், பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், உணவு ஆய்வாளர்கள் பங்கேற்பர்.பரவும் விழிப்புணர்வுஅதன் முடிவில், ஜன.,2 முதல், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில், 'எளிய முறையில் கலப்படம் கண்டறிவது' குறித்த செயல்விளக்க காட்சி அமைக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து, கலப்படம் கண்டறிதல் குறித்து பயிற்சி அளித்தார்.உணவுப் பொருள் கலப்படம் தொடர்பாக, டாக்டர்கள் வாயிலாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் கண்டறியும் உணவு கலப்படம் குறித்து, எங்களுக்கு தகவல் தெரிவித்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.- தமிழ்செல்வன் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-201909:32:34 IST Report Abuse
senthil yaar yaar pangetraargal endru solvathodu nillaamal Enna muraigal vilakkappattana enpathai vilakkinaal nanraaga irukkum.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X