நிதி நிறுவன டிபாசிட்தாரர்6,000 பேர் விண்ணப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2019
05:09

கோவை:யு.டி.எஸ்., நிதி நிறுவனத்தில் டிபாசிட் செய்தவர்களில், நேற்று வரை 6,000 பேர் கிளைம் படிவம் கொடுத்துள்ளனர்.கோவையில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட யு.டி.எஸ்., நிதி நிறுவனம், டிபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததால் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், 80,000க்கும் மேற்பட்டோரிடம், 800 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரிந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாக அந்நிறுவனம் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதன்பேரில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிபாஷா தலைமையிலான ஒரு நபர் கமிஷன், பணத்தை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கோவை கோர்ட் வளாகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டு, பணம் பெறுவதற்கான கிளைம் படிவம் கடந்த 9 ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட டிபாசிட்தாரர்கள் தினந்தோறும் படிவம் கொடுத்து வருகின்றனர்.நேற்று வரை சுமார், 6,000 க்கும் மேற்ட்டோர், கிளைம் படிவம் சமர்பித்து டோக்கன் பெற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த விவரங்கள், ரசீது சரிபார்க்கப்பட்டு, ஒரு நபர் கமிஷன் நீதிபதி உத்தரவுக்கு பிறகு பணம் வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X