அரசு பஸ்சில் கிடந்த ரூ.80 ஆயிரம்: உரியவரிடம் ஒப்படைத்த ஊழியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2019
05:11

பொள்ளாச்சி;அரசு பஸ்சில் தவற விட்ட, 80 ஆயிரம் ரூபாய் பணத்தை உரியவரிடம், டிரைவர் மற்றும் கண்டக்டர் ஒப்படைத்தனர்.கோவையில் இருந்து பொள்ளாச்சி வந்த அரசு பஸ், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பஸ் ஸ்டாண்டை அடைந்தது. பயணிகள் இறங்கியதும், டிப்போவுக்கு செல்வதற்காக, டிரைவர் ஆனந்த், கண்டக்டர் வீரமுத்து பஸ்சை சோதனையிட்டனர். அப்போது, கருப்பு நிற பேக்கில் 80 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.இத்தகவலை, போக்குவரத்து கழக உதவி பொறியாளர் சரவணன், கிளை - 1 மேலாளர் ராமசந்திரனிடம் தெரிவித்தனர். விசாரணையில் பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவருடைய பேக் என்பது தெரிந்தது.கார்த்திகேயனை கிழக்கு போலீசார் வரவழைத்து விசாரித்தனர்.போக்குவரத்துகழக அதிகாரிகள் முன்னிலையில், பணத்தை ஒப்படைத்தனர். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.கார்த்திக்கேயன் கூறுகையில், ''கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அம்மாவை அனுமதித்துள்ளேன். அதற்கான பணத்துடன் வீட்டுக்கு வந்த போது, பஸ்சில் தவற விட்டேன். பஸ் ஊழியர்களின் நேர்மையால், பணம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஊழியர்களுக்கும், கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
13-டிச-201912:52:39 IST Report Abuse
Ram அஜாக்கிரதையால் நடந்த தவறு! இந்த கைபேசி உலகத்தில் தன்னை மறந்து செயல்படும் போது பொருள் மட்டும் அல்ல உயிர் இழந்த சம்பவங்களும் நடக்கிறது. பிறர் பொருளை உரியவரிடம் சேர்த்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் மிக்க நன்றி!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X