ரோட்டிலே பரவிக்கிடக்கிறது மணல் சட்டையின் நிறத்தை மாற்றும் புழுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2019
06:02

விருதுநகர்:விருதுநகரில் ரோட்டோரங்களில் மணல் பரவி கிடப்பதால் புழுதி படர்ந்து காற்றிலும், வாகனங்கள் செல்லும்போதும் பறப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.



விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் பருவமழை பெய்தது. சில நாள் மழைக்கே ரோடுகள் குண்டும் குழியுமானது. சாலையில் இருபுறம், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள் சகதி காடானது. அதை அவ்வபோது முறையாக சீர்படுத்தி அகற்றவில்லை. ஏற்கனவே விருதுநகர் புழுதி காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் சகதியாக மாறிய மணல் அடிக்கும் வெயிலுக்கு புழுதியாக மாறி விடுகிறது.



லேசான காற்று வீசினாலோ, ரோட்டில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்றாலோ ரோட்டில் நடக்க முடியாத அளவிற்கு புழுதி பறக்கிறது. அதிலும் மாலை நேரங்களில் சூறாவளி போல் காற்று வீசுவதால் புழுதி கிளம்பி புயலாக பறக்கிறது. இது ரோட்டில் செல்வோரின் மூக்கை துளைக்கிறது. கண்களை பதம் பார்க்கிறது. நடந்து செல்வோரும், டூவீலரில் செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.



சைனஸ் கோளாறு மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் உருவாகிறது. ரோட்டோர வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விருதுநகர் வீதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ரோட்டில் நடந்தாலோ, டூவீலரில் பயணம் செய்தாலோ தலை முடியின் நிறமும், சட்டையின் நிறமும் மாறும் அளவுக்கு புழுதி அப்புகிறது.



விருதுநகரில் ரோடுகளின் இருபுறமும் பாதி அளவுக்கு மண் படிந்து கிடக்கிறது. அதிலும் விருதுநகர் - அருப்புக்கோட்டை மேம்பாலத்தில் ரோட்டின் இருபுறமும் மணல் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.அதிகாரிகள் உணர்வதில்லைமழைநீர் தேங்கி சகதியாக மாறி, பின் புழுதியாக பறக்கிறது. சாக்கடை கழிவுநீரும் கலந்து இருப்பதால் அந்த புழுதியில் கிருமிகள் நிறைந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் பாதிப்புகள் அதிகம்.



ரோட்டோரங்களில் படியும் சகதியை நகராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்தினால் புழுதி இருக்காது. ஆனால் இந்த புழுதியின் தாக்கத்தை கார் கண்ணாடியை மூடி செல்லும் அதிகாரிகள் உணர்வதில்லை. ரோட்டோரங்களில் பரவியுள்ள மணலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.


-- சுரேஷ், தனியார் ஊழியர், விருதுநகர்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X