மூன்று அடியான 30 அடி ஓடை; அவதியின் பிடியில் லட்சுமி நகர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2019
06:14

அருப்புக்கோட்டை:மோசமான ரோடுகள், சேதமடைந்த வாறுகால்களால், மூன்று அடியான 30 அடி ஓடை என அருப்புக்கோட்டை லட்சுமி நகர் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.



ஆத்திபட்டி புறநகர் பகுதியான் இங்கு நகர் தோன்றி பல ஆண்டுகள் ஆன போதிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.மெயின் ரோட்டிலிருந்து லட்சுமி நகருக்கு செல்லும் ரோடு மோசமான நிலையில் உள்ளது. மழை காலத்தில் நடந்து செல்ல முடியாத வகையில் சகதியாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் சேற்றில் புதைந்து விடுகிறது. அதிகாரிகள் பார்த்து விட்டு போனதோடு சரி. எந்த வித நடவடிக்கையும் இல்லை.



இப்பகுதி மக்கள் சொந்த செலவில் மண் அடித்து ஓரளவிற்கு ரோட்டை சரி செய்துள்ளனர். தெருக்களில் வாறுகால் வசதி இல்லை. வாறுகால் சேதமடைந்து கழிவு நீர் வெளியேற முடியாமல் உள்ளது. இப்பகுதி வழியாக செல்லும் 30 அடி அகல மழை நீர்வரத்து ஓடை பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்பால் 3 அடி ஓடையாக மாறி விட்டது. ஓடையை சரி செய்தால் மழை நீர் வாகை குளம் கண்மாய்க்கு செல்லும்.



ஊராட்சி குடிநீரோ 10 நாளைக்கு 1 முறைதான் வருகிறது. தாமிரபரணி குடிநீர் வருவதில்லை. குப்பை தொட்டிகள் இல்லாமல் குப்பையை ஓடையில் தான் கொட்டுகின்றனர். போதுமான தெரு விளக்குள் இல்லை. கொசு தொல்லை தாங்க முடியவில்லை.



எங்கள் பகுதியில் ரோடே அமைக்கவில்லை. மண் ரோடாக இருப்பதால் மழை காலங்களில் சகதியாகி நடக்க முடியவில்லை. பள்ளி மாணவர்கள் சேற்றில் சைக்கிளை ஓட்டி செல்ல சிரமப்படுகின்றனர். மெயின் ரோட்டிலிருந்து இங்கு வரும் ரோட்டையாவது அமைக்க வேண்டும்.



-- நிர்மலா, குடும்பத்தலைவி.



வாறுகால்கள் இல்லாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. ரோட்டில் தான் கழிவு செல்கிறது. முறையான வாறுகால்கள் அமைத்து கழிவு நீர் சீராக செல்ல ஊராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.



-- ஜோதி, குடும்பத்தலைவி.




நகர் தோன்றி பல ஆண்டுகள் ஆன போதிலும் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்பட வில்லை. முக்கியமாக ரோடு, வாறுகால், தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும். ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியை புறக்கணிக்கிறது. வசதிகள் கேட்டு பலமுறை அதிகாரிகளை பார்த்தும் பணிகள் ஒன்றும் நடக்கவில்லை.



-- பிரகாஷ், தனியார் ஊழியர்.



அடிப்படை வசதிகள் கேட்டு குடும்பத்துடன் ரோடு மறியல் செய்வோம் என அதிகாரிகளிடம் கூறினோம். உடன் வந்த அதிகாரிகள் ஒருசில மாதங்களில் வசதிகள் செய்து தரப்படும் என கூறிவிட்டு சென்றதோடு சரி. மாதங்கள் ஓடி விட்டன. பணிகள் நடக்கவில்லை. அவசியமான தேவையான வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



-- நாராயணசாமி, குடியிருப்போர் சங்க நிர்வாகி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X