ஏரி தீவில் உருவாகும் செயற்கை காடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
02:42

ஆவடி, பருத்திப்பட்டு ஏரியின் செயற்கை தீவில், அடர்வன நடவு முறையில், 670க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, தன்னார்வலர்கள் அசத்தி வருகின்றனர்.



திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, பருத்திப்பட்டு ஏரியில், 28.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைப் பூங்கா அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஏரியின், 53.28 ஏக்கர் நீர்ப்பிடிப்பு

பகுதியில், பொதுமக்கள் படகு சவாரி செய்ய, இத்திட்டத்தின் கீழ், 46.45 லட்சம் ரூபாய்

மதிப்பீட்டில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பார்வையாளர்களை கவருவதற்காக, ஏரியின் நடுவே, 44.81 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு செயற்கைதீவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.



அதில், பறவைகள் தங்கி முட்டையிட்டு செல்ல வசதியாக, சில மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக மரக்கன்றுகளை நடுவதற்கு, ஆவடி மாநகராட்சியிடம், 'நனை' அமைப்பினர் அனுமதி பெற்றுள்ளனர்.இதற்காக, அந்த அமைப்பின் பல்வேறு துறைகளை

சேர்ந்தோர், மரக்கன்றுகளை நடுவதற்கு, சமூகவலைதளங்கள் வாயிலாக ஒருங்கிணைந்து

உள்ளனர்.



வார விடுமுறை நாளில் இணையும் இவர்கள், மூன்று வாரங்களுக்கு மேலாக, 'மியோவாக்கி' எனப்படும், ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும், அடர்வன நடவு முறையில், நாட்டு

மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.மலை வேம்பு, சொர்க்கம், குதிரை புடுக்கன், வேங்கை,

மஞ்சாடி, புங்கை, செம்மரம் உள்ளிட்ட பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.


இதுவரை, 670க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், மரக்கன்றுகளுக்கு தேவையான ஊன்றுகோல் வெட்டுவது, குழி தோண்டுவது, தேவையான சாப்பாடு உள்ளிட்ட

ஒவ்வொரு பணிகளையும், தன்னார்வத்தால் முகம் தெரியாதவர்களோடு இணைந்து,

செயல்பட்டு அசத்துகின்றனர்.



'நனை' அமைப்பினர் கூறியதாவது:



சென்னையில் எந்தப் பகுதியிலும் மரம் நடுவதற்கு இடம் இருந்தால் போதும். நாங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக இணைந்து, அங்கு மரக்கன்றுகள் நட்டு வளர்த்து தருவோம். ஐந்து பேருடன் தான் ஆரம்பித்தோம். தற்போது பலர், எங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்த ஏரித் தீவில் மட்டும், 1,200 மரக் கன்றுகள் நடுவதற்கான இடவசதி உள்ளது. அடர்வனம் நடவு முறையில், ௧ அடி இடைவெளியில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.




இதனால் பூமிக்கு கீழ், மரக்கன்றுகளின் வேர்கள் பின்னிப் பிணைந்து வலிமையாக நிற்கும்.

பறவைகள் தங்கிமுட்டையிட்டுக் செல்வதற்கு ஏற்ப, செயற்கைக்காடாக இந்த இடம் விரைவில் மாறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



ஆரோக்கிய வளையத்தில் பசுமை பூங்கா



'ஒரு பகுதியில், வெவ்வேறு வகையான மரங்களை வளர்ப்பதால், அங்குள்ள மனிதர்களுக்கு ஆரோக்கிய வளையத்தை ஏற்படுத்த முடியும்' என, இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதுபோல், ஆவடி பருத்திப்பட்டு ஏரி, செயற்கை தீவில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மரக்கன்றுகளுள் சிலவற்றைப் பார்ப்போம்.



மலைவேம்பு



தேனீக்களை ஈர்க்கும் தன்மை கொண்டது. பல்வேறு மருத்துவ குணம் கொண்டது.



சொர்க்கம்




மருத்துவ குணம் கொண்டது. ஆண்டு முழுவதும் பசுமையுடன் இருக்கும்.



புங்கன்

குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் தன்மை உடையது.



வேங்கை


இந்த மரத்தின் பால், சிவப்பு நிறம் கொண்டது. தமிழர்கள் நெற்றியில் வைக்கும் பொட்டாக பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.


மஞ்சாடி


இதன் விதைகள் மணி, மணியாக இருக்கும். இதன் காய்ந்த விதைகளை கோர்த்து ஆபரணங்களாக போடும் வழக்கம் தமிழர்களிடையே இருந்தது.



குதிரை புடுக்கன்



இதன் விதைகள் ஆண் குதிரையின் மர்ம உறுப்பைப் போல் இருப்பதால், இப்பெயர் பெற்றது. ஆண்மையை பெருக்கும் மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது.



மகிழம்



பழங்கால தமிழர்கள் மகிழம் மரப் பட்டைகளை பொடியாக்கி, பற்பொடியாக பயன்படுத்தி

வந்துள்ளனர். இயற்கையான, மணம் மிக்கசுற்றுச்சூழலைஉருவாக்கும் தன்மை கொண்டது.

புற்றுநோயை குணப்படுத்தும்தன்மை கொண்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X