ஒன்றிய வார்டுக்கு, வேட்புமனு தாக்கல் 'சுறுசுறு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
03:53

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் சுறுசுறுப்பாக நடந்தது.திருப்பூர் ஒன்றியத்தில் நேற்று, மாவட்ட ஊராட்சி வார்டில் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒன்றிய வார்டுகளில், 4,7வது வார்டுகளில், தலா, இரண்டு பேர்; 3, 5, 8வது வார்டுகளில், தலா ஒருவர் என, ஏழு பேர் மனுதாக்கல் செய்தனர்.பொங்குபாளையம், மேற்குபதி ஊராட்சிகளில் தலா, ஐந்து ; கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லுாரில் தலா, நான்கு; தொரவலுார், இடுவாயில், தலா,மூன்று; பட்டம்பாளையம், ஈட்டிவீரம்பாளையத்தில், தலா, இரண்டு; முதலிபாளையம், வள்ளிபுரத்தில் தலா, ஒருவர் என, 34 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, கணக்கம்பாளையத்தில், 20 பேர்; வள்ளிபுரத்தில், 17; ஈட்டி வீரம்பாளையத்தில், 16; முதலிபாளையத்தில், 14; பெருமாநல்லுாரில், 13; மங்கலத்தில், தொரவலுாரில், தலா, எட்டு; பொங்குபாளையத்தில், ஆறு.மேற்குபதியில், ஐந்து; பட்டம்பாளையத்தில், நான்கு; சொக்கனுார், இடுவாயில், தலா, மூன்று, காளிபாளையத்தில் ஒன்று என, 118 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அளவில் மொத்தம், 160 பேர் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர்.அவிநாசியில்'களை' கட்டியதுஅவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 31 ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான பதவிக்கு, நேற்று, ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.ஊராட்சி தலைவர், உறுப்பினர் பதவிக்கு, கட்சி சின்னம் இல்லை என்ற போதும், கட்சி பின்னணியில் தான், பலரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இருப்பினும், கட்சியில் 'சீட்' கிடைக்காது என்ற நிலையில், பலர் சுயேச்சை, என தங்களை அடையாளப்படுத்தி மனு தாக்கல் செய்தனர்.தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில், கூட்டணி பேச்சு வார்த்தை முழுமை பெறவில்லை. இதனால், தி.மு.க., பா.ஜ., காங்., கட்சியினர், மனு தாக்கல் செய்தனர்.கம்யூ., கட்சியினர் கூறுகையில், 'வேட்பு மனு திரும்ப பெறும் நாள்வரை, கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி செய்யப்படாத நிலை தான் காணப்படுகிறது'என்றனர்.நேற்று, பெண் வேட்பாளர்கள் அதிகளவில் மனு தாக்கல் செய்தனர். பல ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி, இம்முறை பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்,அப்பகுதி கட்சி நிர்வாகிகள், தங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தனர்.நேற்று மட்டும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, 3 பேர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு, 15 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு, 57 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 235 பேர் என, ஒரே நாளில், 310 மனுக்கள் பெறப்பட்டன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X