திருடர்களை வரவேற்குது 'இருட்டு': ஒளிராத தெருவிளக்கு; மாநகராட்சி எங்கே இருக்கு?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
03:56

திருப்பூர்:திருப்பூரில் பெரும்பாலான பகுதிகள் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் அவிநாசி ரோடு, பி.என். ரோடு, ஊத்துக்குளி ரோடு, மங்கலம் ரோடு, பல்லடம் ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பிரதான ரோடுகள் உள்ளன. இவை தவிர நுாற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதிகள், குறுக்கு சந்துகள், வழித்தடங்கள் உள்ளன.பிரதான ரோடுகளில் சில பகுதிகளில் சென்டர் மீடியன் அமைத்து அவற்றில் உயரமான தெரு விளக்குகள் உள்ளன. முக்கிய சாலை சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்ட், மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் மெர்க்குரி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ரோடுகள், வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் குழல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வகையில், மாநகராட்சி பகுதி முழுவதும் 31 ஆயிரத்து 950 விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல்வேறு குறுக்கு வீதிகள் மற்றும் தெருக்களில் ஆங்காங்கே உள்ள விளக்குகள் பழுதடைந்தும், சேதமடைந்தும் எரியாமல் வெறுமெனக் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.சுண்டமேடு, முருங்கம்பாளையம் பகுதிகளில் நீண்ட துாரத்துக்கு வரிசையாக உள்ள தெரு விளக்குகள் எரியாமல் திருட்டு வழிப்பறி சம்பவங்கள் நடப்பது சகஜமாக உள்ளது. அதே போல் நகரில் பரபரப்பான மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதி, நொய்யல் கரையோரம், பேப்ரிகேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் முறையாக எரிவதில்லை.அவிநாசி ரோடு காந்தி நகர், பி.என். ரோடு முதல் புஷ்பா சந்திப்பு வரை, ஊத்துக்குளி ரோட்டில் இரண்டாவது கேட் முதல், மண்ணரை வரை, பல்லடம் ரோடு தென்னம்பாளையம், வீரபாண்டி பகுதிகளில் பெரும்பாலான நாட்களில் தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.நகரில் பல பகுதிகளில் சேதமான விளக்குகள் மாற்றப்படாமல் அபாய நிலையில் தொங்குவதைப் பார்க்க முடிகிறது. இதனால், இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடப்பதும், சமூக விரோத நபர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.மாநகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு அலுவலர் ராம்மோகன் கூறியதாவது:மாநகராட்சியில் உள்ள தெரு விளக்குகளில், 28 ஆயிரம் விளக்குகள் தனியார் பராமரிப்பில் உள்ளது. மீதமுள்ள 3 ஆயி ரம் விளக்குகள் நேரடியாக மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 3 ஆயிரத்து 263 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணி நடக்கிறது.தற்போது பயன்பாட்டில் உள்ளதில் 6ஆயிரத்து 600 குழல் விளக்குகள், எல்.இ.டி., விளக்குகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணி நடக்கும் இடங்களில் விளக்குகள் ஏதேனும் இணைப்பு வழங்காமல் எரியாமல் இருக்கலாம்.தெரு விளக்குகள் பராமரிப்பு குறித்து உரிய கண்காணிப்பு மேற்கொண்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது.தெரு விளக்கு தொடர்பான புகார் இருப்பின் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். கட்டணமில்லா தொலை பேசி 850 850 0000 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.கோவையில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் திருப்பூர் மாநகராட்சிக்கும், உரிய பிரிவு ஊழியர்களுக்கும் தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென வார்டு வாரியாக தொழில் நுட்ப ஊழியர்கள் அடங்கிய குழு பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X