மூன்று ஒன்றியங்களில் 983 பேர் வேட்புமனு தாக்கல்: நேற்று ஒரே நாளில் 713 மனுக்கள் குவிந்தன
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
04:18

உடுமலை:உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று வரை, 983 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், கடந்த 9 ம்தேதி முதல், உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.உடுமலை ஒன்றியத்தில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்றுமுன்தினம் வரை, 115 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. நேற்று நல்லநாள் என்பதால், ஒரே நாளில், 294 மனுக்கள் என, மொத்தம், 409 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.ஊராட்சித்தலைவர் பதவிக்கு நேற்றுமுன்தினம் வரை, 30 பேரும், நேற்று, 71 பேர் என, 101 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நேற்று முன்தினம் வரை, 14 பேரும், நேற்று, 28 பேர் என, மொத்தம், 42 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, இதுவரை, 5 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். உடுமலை ஒன்றியத்தில், இதுவரை, 557 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.குடிமங்கலம்குடிமங்கலம் ஒன்றியத்தில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்றுமுன்தினம் வரை, 41 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. நேற்று மட்டும் 139 மனுக்கள் என, மொத்தம், 180 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.ஊராட்சித்தலைவர் பதவிக்கு நேற்றுமுன்தினம் வரை, 18 பேரும், நேற்று, 27 பேர் என, 45 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நேற்றுமுன்தினம் வரை, 6 பேரும், நேற்று, 18 பேர் என, மொத்தம், 24 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, இதுவரை, ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். குடிமங்கலம் ஒன்றியத்தில், இதுவரை, 250 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.மடத்துக்குளம்மடத்துக்குளம் ஒன்றியத்தில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்றுமுன்தினம் வரை, 37 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. நேற்று மட்டும் 108 மனுக்கள் என, மொத்தம் 145 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.ஊராட்சித்தலைவர் பதவிக்கு நேற்றுமுன்தினம் வரை, 3 பேரும், நேற்று, 14 பேர் என, 17 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நேற்றுமுன்தினம் வரை, 2 பேரும், நேற்று, 11 பேர் என, மொத்தம், 13 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, நேற்று ஒருவர் மட்டும் மனுதாக்கல் செய்துள்ளார். மடத்துக்குளம் ஒன்றியத்தில், இதுவரை, 176 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.வேட்புமனு தாக்கல் துவங்கி நான்கு நாட்களாக, போதிய மனுக்கள் பெறப்படாத நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்பதால், ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில், 3 ஒன்றியங்களிலும் 713 பேர் தாக்கல் செய்தனர். இதுவரை, மொத்தம், 983 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X