| தகராறில் ஒருவர் காயம்: இருவர் கைது Dinamalar
தகராறில் ஒருவர் காயம்: இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 டிச
2019
04:24

கூடலுார்;மசினகுடியில், அ.தி.மு.க., வினர் இடையே ஏற்பட்ட தகராறில், இருவரை கைது செய்த போலீசார், ஒருவரை தேடி வருகின்றனர்.மசினகுடியை சேர்ந்தவர் மொய்தீன். முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலரான இவர், தற்போது, அ.தி.மு.க., கூடலுார் ஒன்றிய துணை செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இஸ்மாயில், 42, என்பவருக்கும் தேர்தல் பணி செய்துவது தொடர்பாக, ஏற்கனவே பிரச்னை இருந்துள்ளது.மசினகுடியில், இரு தினங்களுக்கு முன் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில், இஸ்மாயில் தாக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மசினகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து, மசினகுடி சேர்ந்த முஜிபூர்ரகுமான்,43, ரங்கசாமி, 35, ஆகியோரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள மொய்தீனை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X