| நூறு நாள் திட்ட பணிக்கு சம்பளம் கிடைக்கல... ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள் Dinamalar
நூறு நாள் திட்ட பணிக்கு சம்பளம் கிடைக்கல... ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 டிச
2019
04:25

பந்தலுார்;பந்தலுார் அருகே, சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை, நுாறு நாள் திட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு, சம்பளம் வழங்க வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மத்திய அரசு நிதியின் கீழ், கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு, 100 நாட்கள் பணி வழங்கப்படுகிறது. வாரம் தோறும் இவர்களின் பணி நாட்களுக்கான சம்பளம், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதில், கடந்த சில மாதங்களாக, தமிழகத்திற்கு நிதி, ஒதுக்கீடு செய்யாததால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மொத்தம், 729 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் நிலையில், தற்போது, 649 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், ஊராட்சிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், சேரங்கோடு ஊராட்சியில் பணி மேற்கொண்ட, தொழிலாளர்களுக்கு கடந்த, 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சென்னை, ஊட்டி அலுவலகங்களுக்கு தொடர்பு கொண்டு நொந்துபோன, தொழிலாளர்கள் நேற்று காலை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.'தற்போது தேர்தல் நடைமுறையில் உள்ளதால், போராட்டம் நடத்தகூடாது,' என, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தா கதிரவன், சிறப்பு பிரிவு போலீஸ் பிரபாகரன் தலைமையிலான போலீசார் அறிவுறுத்தினர்.தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம், செயலாளர் சஜீத் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 'சேரங்கோடு ஊராட்சியில், 31 தொகுப்பு மையங்களில், 12 ஆயிரத்து 200 பேர் பதிவு செய்துள்ளனர். தற்போது, 16 தொகுப்பு மையங்களில், 312 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பணி நாளை பொறுத்து, சம்பளம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், விரைவில் சம்பளம், தொழிலாளர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X