உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு : வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குனர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
04:26

ஊட்டி:'உணவு தானிய உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளது,' என, தெரிவிக்கப்பட்டது.ஊட்டி, மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனத்தில், 'ஊரக வாழ்வாதார பகுதிகளில் நீர் பிடிப்பு முகடு மேலாண்மையில் புதிய தொழில் நுட்பங்கள்' குறித்த தேசிய அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தேசிய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் துணை பொது இயக்குனர் அழகுசுந்தரம், பயிற்சி முகாமின் 'சிடி'யை வெளியிட்டு பேசியதாவது:நம் நாட்டின் வேளாண்மை ஆராய்ச்சியில், 25 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனத்தில், 6,000 விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உணவு தானிய உற்பத்தியில், 2018-19ம் ஆண்டில், 315 மில்லியன் டன் உற்பத்தி செய்து, நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம்.பயிர் வகை உற்பத்தி ஆரம்ப காலங்களில், 17 மில்லியன் டன்னாக இருந்ததால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆராய்ச்சியின் முன்னேற்றம் காரணமாக தற்போது, 26 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. ஆனால், எண்ணெய் வித்து உற்பத்தி குறைந்துள்ளது. மண் வளத்தை பாதுகாத்து கொள்ள தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும். புவி வெப்பமயமாதலால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நீர் பிடிப்பு முகடு மேலாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அழகு சுந்தரம் பேசினார்.கடந்த, 12 நாள் நடந்த பயிற்சியில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர். விஞ்ஞானிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணன், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மைய விஞ்ஞானி மணிவண்ணன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், விஞ்ஞானிகள் ராஜன், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X