| சிறப்பு குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்: என்.எல்.சி., சேர்மன் ராக்கேஷ்குமார் Dinamalar
சிறப்பு குழந்தைகளுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்: என்.எல்.சி., சேர்மன் ராக்கேஷ்குமார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 டிச
2019
00:26

நெய்வேலி:சிறப்பு குழந்தைகளுக்கான உரிமைகளை வழங்கி, அவர்கள் பிற மனிதர்களை போல் நடத்த நாம் உறுதியேற்க வேண்டும் என, என்.எல்.சி.,சேர்மன் ராக்கேஷ்குமார் பேசினார்.



நெய்வேலி வட்டம் 2ல் உள்ள சிநேகா வாய்ப்பு சேவைகள் பள்ளியில் சிறப்புக் குழந்தைகளுக்கு, கடந்த 32 ஆண்டுகளாக அறிவியல் பூர்வமான முறையில் கல்வி மற்றும் இதர பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். நெய்வேலி மகளிர் மன்றத்தின் தலைவர் கஞ்சன் ராக்கேஷ்குமார் தலைமையிலான குழுவினர் இந்த பள்ளியை பராமரித்து வருகின்றனர்.நெய்வேலி சிநேகா பள்ளி வளாகத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய நாள் விழா, நேற்று முன்தினம், கொண்டாடப்பட்டது. என்.எல்.சி., ஒற்றாடல் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி வெங்கட சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன், திட்ட இயக்குநர் நாதள்ள நாக மகேஸ்வரராவ், மின்துறை இயக்குநர் ஷாஜி ஜான், சுரங்கத்துறை இயக்குநர் பிரபாகர் சவுக்கி முன்னிலை வகித்தனர்.என்.எல்.சி.,மருத்துவமனை டாக்டர் விஜயகுமாரி வரவேற்றார்.



என்.எல்.சி.,சேர்மன் ராக்கேஷ்குமார் பேசுகையில், 'சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறுவதற்கு பல்வேறு தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் சிறப்பு குழந்தைகள் எதையும் எதிர்பாராது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு, உரிமைகளை வழங்கி, பிற மனிதர்களை போல் நடத்த உறுதியேற்க வேண்டும். குழந்தைகளை பராமரிக்க, அவர்களின் பெற்றோர்களுக்கு நாம் உதவிடக் காத்திருக்கிறோம் எனத் தெரிவிப்பதும் நமது கடமையாகும்' என்றார்.நெய்வேலி மகளிர் மன்றத்தின் புரவலர்கள் புஷ்பலதா சவுக்கி, ஆன்சி ஷான், முதன்மை பொது மேலாளர்கள் மோகன், சேகர், டாக்டர்கள் மாதவன், மலர்விழி மற்றும் சிநேகா பள்ளியின் முதல்வர் சல்மா பிலிப் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X