சுமூக தீர்வு ! தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வெற்றி தோல்வி இன்றி.... புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 டிச
2019
03:20
பதிவு செய்த நாள்
டிச 15,2019 01:09

புதுச்சேரி:தேசிய மக்கள் நீதிமன்றத்தில் இருதரப்பினரையும் அழைத்து பேசி வெற்றி தோல்வி இன்றி சுமூக தீர்வு காணப்படுகிறது என புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் பேசினார்.


தேசிய சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவரான சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணாஉத்தரவின்படி, புதுச்சேரி நான்கு பிராந்தியங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.புதுச்சேரியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி தனபால் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரான நீதிபதி சோபனாதேவி, முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், கூடுதல் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதி, குற்றவியல் நடுவர்கள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் நேரடி வழக்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.


குறிப்பாக, சமாதானமாகக்கூடிய கிரிமினல் வழக்கு, காசோலை வழக்கு, வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு, கணவன், மனைவி பிரச்னை, ஜீவனாம்ச வழக்கு, உரிமையியல், சிவில் வழக்கு, தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்கு, வங்கி கடன் தொடர்பான வழக்கு போன்றவற்றுக்கு நேரடியாக தீர்வு காணப்பட்டது. புதுச்சேரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 9 அமர்வுகளும், காரைக்கால், மாகியில் தலா ஒரு அமர்வு என 11 அமர்வுகள் செயல்பட்டது.


தலைமை நீதிபதி தனபால் கூறும்போது, சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இதில் சமாதானம் செய்யக்கூடிய கிரிமினல் வழக்கு, காசோலை வழக்கு, வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு உள்பட 4126 வழக்குகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் வந்துள்ளன. இருதரப்பினரையும் அழைத்து பேசி வெற்றி தோல்வி இல்லாமல் சுமூக தீர்வுகள் காணப்படுகிறது என்றார்.


வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துவேல், துணை தலைவர் கமலினி, செயலர் தாமோதரன், சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், அரசு துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வழக்காளிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X