இதையும் கவனியுங்க !ரேஷனில் தரமற்ற பொருட்கள் விற்பனை :கட்டாயப்படுத்துவதால் மக்கள் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
01:19

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்ட ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன்

தரமற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதோடு, வாங்க மறுப்போரை மிரட்டும்

விதத்தில் பேசுவாதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.



அரசின் சார்பில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி , கோதுமை இலவசமாகவும் , சீனி, மண்ணெண்ணைய், துவரம் பருப்பு, பாமாயில் மானிய விலையிலும்வழங்கபட்டு

வருகிறது. இப்பொருட்கள் ஒவ்வொரு குக்கிராமத்திலும் மக்களுக்கு நேரடியாக சென்று

சேருவதால் ஏழைகள் முதல் வசதிபடைத்தவர்கள் வரை மாதம் தோறும் வாங்கி

செல்கின்றனர்.



இவ்வாறு வாங்கும் பொருட்களின் எடை ஒவ்வொரு பொருளிலும் 10 முதல் 20 சதவீதம் வரை குறைந்து விடுகிறது. அதிலும் அரிசியை பொறுத்தவரை அரசு வரையறுத்த அளவில்

வழங்காமல் ரேசன் கடை ஊழியர்கள் இஷ்டத்திற்கு வழங்கபடுகிறது. இதையெல்லாம் மக்கள் பொறுத்து கொண்டாலும் இப்பொருட்களுடன், சேமியா, ரவை, தேயிலை, பருப்பு, பொரிகடலை, அம்மா உப்பு, சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கட்டாயமாக வாங்க

நிர்பந்தபடுத்துகின்றனர்.



இதை வாங்க மக்கள் மறுத்தாலும் அடாவடியாக பேசி மிரட்டும் தோனியில் வற்புறுத்த

படுகின்றனர். இவ்வாறு வழங்கபடும் பொருட்கள் தரமற்றதாக ,உணவிற்காக பயன்படுத்த

முடியாமலும் இருப்பதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.இதோடு அரசின் மீதும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நடவடிக்கை எடுக்கவேண்டிய உயர் அதிகாரிகளும்

அலட்சியபோக்குடன் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து ரேஷன்

பட்டியலில் இல்லாத பொருட்களை வாங்க நிர்பந்திக்ககூடாது என அறிவுறுத்தவேண்டும்.




ரேஷன் பொருட்களை நம்பி அதிகளவில் மக்கள் இருக்கின்றனர். சோப்பு வாங்கினால் தான் அரிசி என மிரட்டும் வகையில் பேசுகின்றனர். ரேஷன்கடைகளில் தனிநபர்கள் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செலுத்துகின்றனர். இதை கடை பொறுப்பாளர்கள் கண்டிப்பதில்லை. இதோடு மக்களை அலைகழிக்கின்றனர்.



-தேன்கனி, ஸ்ரீவில்லிபுத்துார்..

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X