கடலில் குளித்த 13 பேர் ராட்சத அலையில் சிக்கினர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
01:30

புதுச்சேரி:புதுச்சேரியில் கடலில் குளித்த 13பேர் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டதில், பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் ஊழியர் இறந்தார். மாயமான கல்லுாரி மாணவரை தேடும் பணி நடந்து வருகிறது.


பெங்களூரு டி.எக்.சி., சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் தீபூ,24; சகனா, பவித்ரா, தனுஸ்ரீ உள்ளிட்ட எட்டு பேர் நேற்றுமுன்தினம் புதுச்சேரி வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் அன்று இரவு ஆரோவில் பகுதியில் உள்ள விடுதியில் தங்கினர். நீச்சல் தெரியாத இவர்கள் நேற்று பகல் 12:00 மணி அளவில் தந்திராயன்குப்பம் கடலில் இடுப்பளவு ஆழத்தில் இறங்கி நின்று விளையாடிக்கொண்டிருந்தனர்.


அப்போது கடலில் எழுந்து வந்த ராட்சத அலை அனைவரையும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது. அவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து எட்டு பேரையும்காப்பற்றி கரைக்கு இழுத்து வந்தனர். பின், அனைவரையும் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போகும் வழியிலேயே தீபூ இறந்தார். சகனா,25; பவித்ரா,24; தனுஸ்ரீ,24; ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபூ இறந்தது குறித்து, பெங்களூருவில் உள்ள அவரது பெற்றோருக்கு கோட்டக்குப்பம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


மற்றொரு சம்பவம்:வேலுார் மாவட்டம், பணப்பாக்கத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் 14 பேர் நேற்று பகல் 12:00 மணி அளவில், புதுச்சேரி தலைமை செயலகம்எதிரே உள்ள செயற்கைகடற்கரை மணலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர்களில், நீச்சல் தெரிந்த ஐந்து பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர்.


அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை ஐந்து பேரையும் இழுத்து சென்றது.நண்பர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் கடலில் இறங்கி அலையில் இழுத்து செல்லப்பட்ட ஆர்.விஜி,19; என்.விஜி,20; ஆனந்த்,20; சூர்யா,19; ஆகிய நான்கு பேரை மட்டுமே கரைக்கு இழுத்து வந்தனர். மாணவர் கோவர்த்தனன் மாயமானார். மீட்கப்பட்ட நான்கு பேரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காணாமல் போன மாணவர் கோவர்த்தனனை தீயணைப்பு படையினர், கடலோர காவல் படையினர் தேடிவருகின்றனர். நேற்று மாலை வரை கோவர்த்தனை கண்டுபிடிக்க முடியவில்லை.ஆழமான புதுச்சேரி,தந்திராயன் குப்பன் கடற்கரையில் எப்போதும் அலை சீற்றமாகவே காணப்படும். அப்பகுதியில் யாரும் இறங்கி குளிக்க கூடாதுஎன்று போலீசார் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.அதனை மீறி கடலில் இறங்கி குளித்த 13 பேரும் ராட்சத அலையில் சிக்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவங்கள் குறித்து முறையே கோட்டக்குப்பம் மற்றும் பெரியக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.மீனவர்களால்உயிர் பிழைத்தோம்தந்திராயன்குப்பம் கடல் அலையில் சிக்கி உயிர் பிழைத்த ஷாம் கூறுகையில், நீச்சல் தெரியாத நாங்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று குளித்து கொண்டிருந்தோம். திடீரென எழுந்த ராட்சத அலை மற்றும் நீர் சுழலும் எங்களை ஆழமான பகுதிக்கு இழுத்து சென்றது. மீனவர்கள் வந்து கப்பாற்றியதால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்றார்

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X