புதுச்சேரி:டில்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் நாளை புதுச்சேரி திரும்புகிறார்.சென்னையில் உள்ள மருத்துவமனையில் முதல்வர் நாராயணசாமி, கடந்த மாதம் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
சிகிச்சைக்கு பின் புதுச்சேரி திரும்பிய அவருக்கு வீட்டிலேயே பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உடல்நிலை ஓரளவுக்கு சீரானதை தொடர்ந்து, முக்கியமான நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். 20 நாட்களுக்கு பின், நேற்று முன்தினம், சட்டசபைக்கு சென்ற முதல்வர், பிரான்ஸ் துாதுவரை சந்தித்தார். பின், சென்னைக்கு புறப்பட்ட முதல்வர் நாராயணசாமி, அங்கிருந்து விமானத்தில் டில்லிக்கு பறந்தார். டில்லியில் காங்., சார்பில் நடந்த போராட்டத்தில் நேற்று பங்கேற்றார்.டில்லியில் முகாமிட்டுள்ள அவர், நாளை காலை புதுச்சேரி திரும்புகிறார்.