| ரவுடி கொலை வழக்கு: வெடிகுண்டு தயாரித்தவர் கைது Dinamalar
ரவுடி கொலை வழக்கு: வெடிகுண்டு தயாரித்தவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 டிச
2019
01:38

புதுச்சேரி:ரவுடி அன்புரஜினியை கொலை செய்ய வெடிகுண்டு தயாரித்து கொடுத்த பிரபல ரவுடி சுகனை போலீசார் கைது செய்தனர்.


முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவுடி அன்புரஜினி,32; கடந்த மாதம் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ரவுடி சோழன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதனைத் தொடர்ந்து, அன்புரஜினியை கொலை செய்ய வெடிகுண்டு தயாரித்து கொடுத்த பிரபல ரவுடி சுகன்,34; என்பவரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X