'பீட் ஆபிசர்கள்' கவனமாக கண்காணிக்க வேண்டும்: கவர்னர் கிரண்பேடி அட்வைஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
01:40

புதுச்சேரி:புதுச்சேரியில் 'பீட் சிஸ்டம்' சிறப்பாக செயல்பட தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் என கவர்னர் கிரண்பேடி அட்வைஸ் செய்தார்.


'பீட் ஆபிசர்களுடன்' கவர்னர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி பல்கலையில் நடந்தது.சீனியர் எஸ்.பி., அகன்ஷா யாதவ் பேசுகையில், புதுச்சேரி போலீஸ் துறையில் புதிய பீட் சிஸ்டம் அறிமுகப்படுத்தி உள்ளதால் 'பீட் ஆபிசர்களின் எண்ணிக்கை 149ல் இருந்து 761 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் 15 சதவீத பெண் போலீசார் 'பீட் ஆபிசர்களாக' நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.தலைமை செயலர் அஸ்வனி குமார் பேசகையில், 'பீட் சிஸ்டம்' நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


'பீட் ஆபிசர்களுடன்' கலந்துரையாடி கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:டில்லியில் கடந்த 1980-81ம் ஆண்டுகளில் நான் போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய போது, போலீஸ் ஸ்டேஷன்களில் 'பீட் ஆபிசர்' சிஸ்டம் அறிமுகப்படுத்தினேன். இதன் மூலம் கிரிமினல்கள் பற்றிய விபரங்கள் முழுவதுமாக சேகரிக்கப்பட்டு, கண்காணிப்பு நடந்தது. இந்த முறையைதான் புதுச்சேரியில் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளோம்.'பீட் ஆபிசர்கள்' தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாக்களில் கவனமாக கண்காணிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழி யர்கள், மார்க்கெட் சங்கங்கள், தனியார் செக்யூரிட்டிகள், குடியிருப்பு நல சங்கங்களுடன் நெருக்கமான தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இங்கிருந்து பல தகவல்கள் பெற முடியும்.போலீஸ் அதிகாரிகள் வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பித்து குற்றவாளிகள் பற்றிய விவரங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். 'பீட் சிஸ்டம்' சிறப்பாக செயல்பட தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும்.இவ்வாறு கவர்னர் பேசினார்.தொடர்ந்து பீட் ஆபிசர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


பீட் ஆபிசர்களுக்கு இ-புத்தகம் டி.ஜி.பி., பாலாஜி ஸ்ரீவத்சவா பேசுகையில், 'பீட் ஆபிசர்கள்' தற்போது நோட்டு புத்தகத்தில் குறிப்புகளை எழுதுகின்றனர். புதுச்சேரியில் விரைவில் இ-புத்தகம் அறிமுகப்படுத்தப்படும். இது பீட் ஆபிசர்களின் பணிசுமையை குறைக்கும் என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X