நம்பிக்கை ஊட்டிய அறிவியல் கண்காட்சி: திறமையை வெளிக்கொணர்ந்த மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
01:54

சிவகாசி:மாணவர்கள் தங்களது அறிவை விரிவுபடுத்தி கொள்வதற்காக ஒவ்வொரு

பள்ளியிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். மாணவர்கள் தாங்களாகவே பல்வேறு அறிவியல் சார்ந்த பொருட்களை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவார்கள்.



இதற்காக பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடத்துவர். மாணவர்கள் தங்களது சுய கண்டு

பிடிப்புகளை கண்காட்சிக்கு வைப்பர்.இக்கண்காட்சியானது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி,

சிந்தனையை வளர செய்கிறது. மாணவர்களின் படைப்பு, கற்பனை திறனை வெளிக்கொண்டு வர வாய்ப்பு ஏற்படுத்துகிறது.



அறிவு மற்றும் செயல் திறன்களை வெளிப்படுத்தி புதியன படைக்கவும் ஆழ்மனதில் உள்ள எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கவும் வாய்ப்பாக அமைகிறது. மாணவர்களின் திறனை ஆக்கபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் பெற வேண்டியது ஆசிரியர்கள், பெற்றோரின் கடமையே. பள்ளிகள் வெறும் புத்தகத்தை போதிக்கும் இடமாக இல்லாமல் மாணவர்களின் அறிவு திறமையை விரிவடைய வைக்கும் போதி மரமாக இருக்க வேண்டும்.



அந்த வகையில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சிவகாசி மாரனேரி கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளியில் 'நவி கல்பனா - 2019 என்ற பெயரில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.



மொழிப் பாடங்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து தாங்கள் கற்றுக்

கொண்டவற்றை செயல்முறையில் காட்சிப்படுத்தியிருதனர்.



மாணவர்களின் படைப்பாற்றலும் கற்றல் திறனும் கண்காட்சி மூலமாக மெருகேற்றப்பட்டது. இதனால் அவர்களின் சிந்திக்கும் திறன் வளர்கிறது. நம்மால் முடியும் என்ற நம்பிக்கை

மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. பார்வையிட்ட பெற்றோர், இதர பள்ளி மாணவர்களிடம் தயக்கமின்றி எடுத்து கூறினர்.



--கலையரசன் , ஆசிரியர்,


கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளி.



மாணவர்களுக்காக மாடர்ன் வில்லேஜ் அமைக்கப்பட்டது. இது சிறு சிறு கிராமங்களிலும் கூட எந்தவிதமாக எல்லா இயற்கை வளங்களையும் உபயோகிப்படுத்த முடியும் என விளக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரயான வழியை கண்டுபிடித்து உள்ளே நுழையும் படி அமைக்கப்பட்டிருந்த புதிர் நுழைவு அனைவரையும் கவர்ந்தது.



புனிதவதி, ஆசிரியை,



கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளி.



கடந்தாண்டு கண்காட்சி போலவே இந்தாண்டு நடந்த கண்காட்சியிலும் எங்களின்

படைப்புகளை காட்சிபடுத்தினோம். பார்வையாளர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தோம். எங்களது படைப்புகள் மட்டுமன்றி மற்ற பள்ளி மாணவர்களின் படைப்புகளையும் கேட்டு தெரிந்து கொண்டோம்.



சுஜித், 7 ம் வகுப்பு மாணவன்,


கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளி.



கண்காட்சியின் மூலமாக தெரியாத பலவற்றையும் தெரிந்து கொண்டோம். எங்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் உதவும் விதமாக இருந்தது.படிப்பு மட்டுமே என்றிருந்தால் போர் அடித்து விடும்.

இதுபோன்று மாணவர்களின் விரிசிந்தனையை துாண்டும் நிகழ்வுகள் மகிழ்ச்சியளிக்கிறது.



ராஜ்குமார், 7ம் வகுப்பு மாணவன்,


கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளி,

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X