குடிநீருக்காக பள்ளங்கள் கஷ்டத்தில் கரிசல்குளம் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
01:55

காரியாபட்டி:காரியாபட்டி கட்டுக்குத்தகை கரிசல்குளத்தில் இடியும் நிலையில் மேல்நிலை தொட்டி,குடிநீருக்காக பள்ளங்கள் , ரோட்டில் சாக்கடை கழிவு நீர் தேக்கம் என பாதிப்பில் கிராம மக்கள் உள்ளனர்.



காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. பில்லர்களில் கம்பி துருப்பிடித்து இடியும் நிலையில் உள்ளது.
இதன் அருகே பால்வாடி, ரேஷன் கடை, நாடக மேடை இருப்பதால் எப்போதும் மக்கள் கூடும் இடமாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருப்பதால் மக்கள்

நடமாட அச்சப்படுகின்றனர்.



இதை அப்புறப்படுத்த பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. போதிய வாறுகால் வசதி இல்லாததால் வீட்டு கழிவு நீரை வெளியேற்ற வழியில்லாமல் வீதியில் விடுகின்றனர்.

ரோட்டில் கழிவு நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. பள்ளமாக இருக்கும் ஒரு பகுதியில் குடிநீர் சப்ளை எளிதில் கிடைக்கிறது. மேடான பகுதியில் பள்ளம் தோண்டி குடிநீர் சேகரிக்க வேண்டிய நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.



தொடர் மழை காரணமாக பள்ளங்களில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி வருவதால் தொற்று கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது.


மேல்நிலை தொட்டி சேதமடைந்த பகுதிகள் தொடர் மழைக்கு மேலும் வலுவிழந்து

இருப்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் அப்புறப்படுத்த வேண்டும்.


பாண்டி, விவசாயி.



பிள்ளையார் கோயில் தெரு களிமண் தரையாக இருப்பதால் மழை நேரத்தில் ஆட்கள்கூட நடந்து செல்ல முடியவில்லை. வாறுகால் வசதி இல்லை. ஊரை ஒட்டி உள்ள ஊரணி நிரம்பி உள்ளது. இங்கு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் மக்கள் பயன்படுத்த

தயங்குகின்றனர். சுற்று சுவர் கட்டி தெப்பம் போல் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .


ராஜபாண்டி, தனியார் ஊழியார்



குடிநீர் சப்ளை தொட்டியில் பிளீச்சிங் பவுடரை மொத்தமாக கொட்டி செல்கின்றனர்.

தொட்டிகள் பாசம் பிடித்து பார்க்கவே அருவருப்பாக உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்து

வதால் உடல் பாதிப்பு ஏற்படுகிறது. தெருக்களில் போடப்பட்ட சிமென்ட் ரோடு பெயர்ந்து

கற்களாக இருப்பதால் நடக்க சிரமமாக உள்ளது.


கோபி, குடும்பத்தலைவி.



மழை நேரத்தில் மழை நீருடன் கழிவு நீரும் தேங்குவதால் குடிநீரில் கலந்து தொற்று கிருமிகள் பரவும் நிலை உள்ளது . கண்மாயில் கண்ட இடங்களில் கிராவல் மண் எடுக்கின்றனர். மடை

பகுதிக்கு தண்ணீர் வராமல் பள்ளங்களில் தேங்கி கிடப்பதால் பாசனம் செய்ய முடியாமல்

சிரமப்படுகிறோம். மந்தையில் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.


ஆண்டிச்சி, குடும்பத்தலைவி

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X