வனவிலங்கு கணக்கெடுப்பு துவக்கம்! தன்னார்வலர்களுக்கு வனத்துறை பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
02:34

வால்பாறை;குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் கணக்கெடுப்பாளர்களுக்கு, அட்டகட்டியில் பயிற்சி நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், குளிர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி இன்று (15ம் தேதி) துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது.


இதனையடுத்து, வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி, உடுமலை, அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்களை சேர்ந்த வனத்துறையினருக்கு, அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் நேற்று ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.கணக்கெடுப்பு பயிற்சியை, புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து துவக்கி வைத்தார். கூட்டத்தில், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரக அலுவலர் நவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.இன்று, 15ம் தேதி முதல் தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும் கணக்கெடுப்பு பணியில், அந்தந்த வனச்சரக அலுவலர்கள் தலைமையில் வனவர், வேட்டைத்தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:குளர்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு, ஏற்கனவே பல கட்டங்களாக பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.வனவிலங்குகளின் கால்தடம், கழிவுகளை கொண்டு இருப்பிடம் அறிதல், புலிகளின் இரையான தாவர உண்ணிகளின் நடமாட்டம் மற்றும் அவற்றின் அடர்த்தியை வைத்து அறிதல் உள்ளிட்ட முறைகளில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.


அதிகாலை நேரத்தில் தான் கணக்கெடுப்பு பணி நடத்த வேண்டும். அப்போது தான் வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் காண முடியும். கணக்கெடுப்பு பணி மிகவும் துல்லியமான முறையில் இருக்க வேண்டும்.அதேநேரத்தில், வனப்பகுதிக்குள் செல்லும் போது மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும். கணக்கெடுப்பு பணி ஆண்ட்ராய்டு போன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X