கலப்பட உணவு பொருட்கள் விற்றால் உரிமம் :நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
03:14

கோவை:'உணவு பொருட்களில் கலப்படம் செய்தால், அபராதம் விதிப்பதோடு, பதிவு சான்றும் (உரிமம்) ரத்து செய்யப்படும்' என, கோவை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.கோவையில் சாலையோரம், நடைபாதைகளில் பானிபூரி, காளான், சில்லி சிக்கன், மீன் உட்பட பல்வேறு துரித உணவுகள், இட்லி, தோசை போன்ற அனைத்து வகை உணவுகள் தள்ளுவண்டி கடைகள் மூலம் விற்கப்படுகின்றன.


பல்வேறு வகையாக கலப்படங்கள் செய்யப்படுவதாக, நுகர்வோர் தரப்பில் புகார் எழுகிறது.அதனால், காலாவதியான பொருட்களால், சுகாதாரமின்றி உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் மீதும், கலப்பட உணவு விற்பவர்கள் மீதும் உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


ரூ.12 லட்சத்துக்கு கீழ் உணவு வணிகம் செய்பவர்கள் மீது, அபராத நடவடிக்கை எடுப்பதுடன், விதிக்கப்பட்ட அபராதத்தை மூன்று வேலை நாட்களுக்குள் செலுத்தாத பட்சத்தில், பதிவு சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதோடு, வணிகம் செய்வது நிறுத்தப்படும், என, கலெக்டர் ராஜாமணி எச்சரித்துள்ளார்.தண்டனை என்ன?ரூ.12 லட்சத்துக்கும் கீழ் கொள்முதல், விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், பதிவு சான்று பெற்றுள்ள சிறு, குறு தயாரிப்பாளர்கள், முதல்முறை குற்றத்துக்கு, 3,000 ரூபாய், இரண்டாம் முறை - 6,000 ரூபாய், மூன்றாம் முறை - 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மூன்று முறைக்கு மேல் அதே குற்றத்தில் ஈடுபட்டால், பதிவு சான்று உரிமம் ரத்து செய்யப்படும்.n சிறு மளிகை கடைகள், நடமாடும் உணவு வணிகர்கள், தற்காலிகமாக கடை நடத்துவோரிடம் (தள்ளுவண்டி, பெட்டி கடைகள்) 1,000 மற்றும், 2,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.


மூன்றாம் முறையாக இருப்பின், 5,000 ரூபாய் வசூலிப்பதுடன், பதிவு சான்று உரிமம் ரத்து செய்யப்படும்.n தினமும், 500 லிட்டருக்குள் பால் விற்பனை செய்யும் பால்காரர்கள், சிறு பால் விற்பனை நிலையங்களுக்கு, முதல் முறை குற்றத்துக்கு, 2,000, இரண்டாவது முறைக்கு, 4,000, மூன்றாவது முறைக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பதிவு சான்று உரிமம் ரத்தாகும்.


தினமும், இரு பெரிய விலங்குகள், 10 சிறிய விலங்குகள் அல்லது, 50 பறவை இனங்கள் விற்பனை செய்யும் இறைச்சி விற்பனையாளர்களுக்கு (ஆடு, மாடு, கோழி, மீன்), முதல் முறை, 2,000, இரண்டாவதாக, 4,000, மூன்றாவது முறைக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் பதிவு சான்று உரிமம் ரத்து செய்யப்படும்.n அனுமதியற்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு பொட்டலமிடும் உணவு வணிகர்களுக்கு, 2,000, 5000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மூன்றாவது முறையாக அதே தவறை செய்தால், 10 ஆயிரம் அபராதம் மற்றும் பதிவு சான்று உரிமம் ரத்து செய்யப்படும்.


உணவு பொருட்களில் கலப்படம், கலப்பட டீத்துாள், கலப்பட எண்ணெய், அளவுக்கு அதிகமான செயற்கை நிறமி கலந்த உணவு பொருட்கள், தரமற்ற உணவு, தரம் குறைவு, தப்பு குறியீடு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்ற புகார்களுக்கு, 94440 42322 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X