கண்டசாலா பிறந்தநாள் விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
03:15

பிரபல பின்னணி பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் பிறந்த நாள் முன்னிட்டு, கோவையில் கண்டசாலா விருது வழங்கும் விழா, கோவை, புரூக்பாண்ட் ரோடு, கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, சரோஜினி நடராஜ் கலையரங்கில், இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.


சர்வதேச தெலுங்கு கூட்டமைப்பு சார்பில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, பரதக்கலைஞர் கல்யாணசுந்தரம், சிதார் கலைஞர் பண்டிட் மிட்டா ஜனார்த்தன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு விருது வழங்குகிறார். பரதக்கலைஞர்கள் பார்வதி, கவிதா, லாவண்யா ஆகியோர் கண்டசாலா பாடல்களுக்கு நடனமாடுகின்றனர்.'அவசியம் வரணும்'கோவை கே.ஆர்.எஸ்., நாடகக்குழு சார்பில், 'கண்ணன் பார்வையில் கிருஷ்ணன்' என்ற நாடக பயண நுால் வெளியீட்டு விழா, ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டில் உள்ள, பாரதிய வித்யா பவன் வளாகத்தில்இன்று நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு நடக்கும் விழாவில், கோவை ஆர்ய வைத்திய பார்மஸி தலைவர் கிருஷ்ணகுமார், ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்க தலைவர் ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதைத்தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, கோவை கலாலயம் நாடகக்குழுவினரின், 'அவசியம் வரணும்' நகைச்சுவை நாடகம் இடம் பெறுகிறது.'சில்க் இந்தியா' கண்காட்சிகோவை, அவிநாசி ரோடு, பீளமேட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில், சில்க் இந்தியா கண்காட்சி மற்றும் விற்பனை இன்று காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. ஒடிசா, பிகார், அசாம், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் பல்வேறு மாநில கலாசார புடவைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.'பேஷனிஸ்டா'கோவை, ரேஸ்கோர்ஸில் உள்ள, விவாண்டா ஓட்டலில், பேஷனிஸ்டா நகை கண்காட்சி மற்றும் விற்பனை இன்று நடக்கிறது.


காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும், கண்காட்சியில், தமிழகம், மும்பை, புதுடில்லி, ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஆமதாபாத், காஷ்மீர், கோவா, லக்னோ, கான்பூர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 70க்கும் அதிகமான டிசைன்களில் நகைகள், முகூர்த்த பட்டுப்புடவைகள், காலணிகள் என, மணமக்களுக்கு தேவையான பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.


துக்ளக் பொன்விழா கூட்டம்துக்ளக் பொன்விழா சிறப்பு கூட்டம், கோவை நவஇந்தியா, எஸ்.என்.ஆர்., அரங்கில் இன்று நடக்கிறது. ஆசிரியர் குருமூர்த்தி சிறப்புரை ஆற்றுகிறார். பாரதிய வித்யா பவன் கோவை மைய தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரும் உரையாற்றுகின்றனர். மாலை, 5:30 மணிக்கு துவங்கும் நிகழ்வில், மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ பேச்சுக்கள் அடங்கிய சிறப்பு வீடியோ ஒளிபரப்பப்படுகிறது.இலக்கிய பசிக்கு விருந்துபுதுப்புடம், புதுமையான கொண்டாட்டங்களுக்கு மத்தியில், இலக்கிய பசிக்கு சரியான விருந்து படைக்கிறது, களம் இலக்கிய சந்திப்பின், 83வது நிகழ்வு. கோவை சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுடர் உயர்நிலைப்பள்ளியில் இன்று காலை, 10:00 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. தி ஜானகிராமன் படைப்புகள் குறித்து எழுத்தாளர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். கவிஞர் மகேந்திரனின் 'மழை நிரம்பிய கால் சட்டைப் பை' எனும் கவிதை நுாலும் வெளியிடப்படுகிறது.உழவர்களுக்கு 'கிளாஸ்'செஞ்சோலை மற்றும் நற்றிணை அமைப்புகள் இணைந்து உழவர்களுக்கு இயற்கை வழி வீட்டுத்தோட்ட பயிற்சி நடத்துகின்றன. மேட்டுப்பாத்தி மற்றும் இருமடிப்பாத்தி, மூடாக்கு, விதைத்தேர்வு மற்றும் நேர்த்தி, இயற்கை வழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து நேரடி களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. செட்டிபாளையம், கன்னிமார் கோவில் தோட்டத்தில் அமைந்துள்ள நற்றிணை இயற்கை வேளாண் பண்ணையில், காலை, 9:30 முதல், 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும்.பாதை அமைத்த பாரதிஅன்னுார் பாரதி சிந்தனையாளர் பணி மையம் மற்றும் மகாகவி பாரதியார் அறக்கட்டளை சார்பில், 49ம் ஆண்டு பாரதி விழா இன்று மாலை, 4:00 மணிக்கு, அன்னுார் தாசபளஞ்சிக மண்டபத்தில் நடக்கிறது. புலவர் புவனா ஜீவானந்தம், துவக்க உரை நிகழ்த்துகிறார். புலவர் செந்தலை கவுதமன், 'பாதை அமைத்த பாரதி' எனும் தலைப்பில் பேசுகிறார். புலவர் ராமதாஸ், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பேசுகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X