பஸ்சுக்குள் மழை பயணிகள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
03:42

சாணார்பட்டி:சாணார்பட்டி பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.



திண்டுக்கல் நகரிலிருந்து சாணார்பட்டி வட்டாரத்திலுள்ள ஆவிளிபட்டி, அய்யாட்டி,

வீரசின்னம்பட்டி, அஞ்சுகுளிபட்டி, வி.எஸ்.கோட்டை, ராமராஜபுரம், வடுகபட்டி,

சக்கிலியன்கொடை, கோணப்பட்டி, எமக்கலாபுரம், தவசிமேடை கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இப்பகுதிகளில் இருந்து திண்டுக்கல் நகருக்கு தினமும் மாணவர்கள், அலுவலர்கள், வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் சென்று

வருகின்றனர்.



இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பெரும்பாலும் ஓட்டை உடைசலாகவும், மேற்கூரை சேதமடைந்தும் உள்ளன. மழை நேரங்களில் மேற்கூரை வழியாக ஒழுகும் நீர்

பஸ்சினுள்ளும், இருக்கைகளிலும் தேங்குகிறது. ஜன்னல் கண்ணாடிகள் சரியாக செயல்

படாததாலும் மழை நீர் உள்ளே சிதறுகிறது.இதனால் பயணிகள் இருக்கையில் அமர்ந்து அமர்ந்து செல்ல முடியாத நிலை உள்ளது.



அதேநேரம் மேற்கூரை ஒழுகுவதால் நின்று கொண்டு பயணிப்போரும் நனைந்து விடுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் பலர் பஸ்சை நம்பி வந்து அவதிப்படுகின்றனர். இதனால் பயணிகள் தனியார் பஸ்களை நாடும் சூழல் ஏற்படுகிறது.பஸ் கட்டணத்தை உயர்த்தும் அரசு, பஸ்சின் கட்டுமானத்தையும் தரத்தோடு அமைக்க வேண்டும் என புலம்புகின்றனர். அரசுக்கு வருவாய் இழப்பை தவிர்க்கவும், பயணிகளின் நலனை கருதியும் சேதமடைந்த மேற்கூரையை சீரமைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X