போலி ஆவணத்தில் பொருள் வாங்கி மோசடி சிக்கியது திண்டுக்கல் 'டிப்-டாப்' கும்பல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
04:01

சேலம்:திண்டுக்கல்லில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த, 'டிப்-டாப்' கும்பல், அதே பாணியில் சேலத்தில் களமிறங்கி ஒரு கடைக்குள் நுழைந்தது. அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர், நண்பர் மூலம், போலீசுக்கு தகவல் கொடுத்ததால், ஏழு பேரும்

சுற்றிவளைக்கப்பட்டனர்.



திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த, தென்னாம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன், 28.

இவரது கூட்டாளி, வேடச்சந்துார் வரதராஜ், 33. இருவரும் நேற்று காலை, 10:00 மணிக்கு, சேலம் வந்தனர். புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கடையில் தவணை முறையில், 'எல்இடி., 43'

அங்குல, 'டிவி' கேட்டு, தங்கள் ஆதார் அட்டையை கொடுத்தனர். அதில், வரதராஜ், ஜாமின் கையெழுத்திடுவதாக தெரிவித்தார்.



அவர்களது நடவடிக்கையால் சந்தேகப்பட்ட ஊழியர் கோபிநாத், 30, தன் நண்பரான அதே

பகுதியிலுள்ள இருசக்கர வாகன நிலைய மேலாளர் சுரேந்தர் 25, என்பவருக்கு தகவல்

கொடுத்தார். அவர் நேரடியாக சென்று விசாரித்தபோது இருவரும் மோசடி பேர்வழிகள் என்பதும் ஏற்கனவே திண்டுக்கல்லில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. பின், அழகாபுரம்

போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



விசாரணையில் அவர்கள் வாக்குமூலத்தின்படி சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, விடுதியில் தங்கியிருந்த அவர்களது கூட்டாளிகளை சுற்றிவளைத்தனர். அவர்கள், வடமதுரை, அண்ணா நகரைச்சேர்ந்த அருண், 22, ராமு, 23, சரவணகுமார், 22, சிறுநாயக்கன்பட்டி பன்னீர்செல்வம், 43, திருச்சி, மணப்பாறை, முத்தப்படையான்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த மதுபாலன், 23, என்பது தெரிந்தது.



அவர்களிடமிருந்து, மடிக்கணினி, போலி பான்கார்டு - 7, ஓட்டுனர் உரிமம் - 7, ஆதார் அட்டை - 32 என, 46 ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.போலீசாரிடம், ஏழு பேரும் அளித்த வாக்குமூலம்: போலியாக, ஆதார் அட்டை தயாரித்து, அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டோம். அதாவது, ஷாேரூமில், வைப்புத்தொகை மட்டும் செலுத்தி, போலி ஆதார் மூலம், தவணை முறையில் பொருட்கள் வாங்கி வந்து, விற்று பணமாக்குவோம். அதற்கான, மீதி தவணைத்தொகை

செலுத்தாமல், மோசடி செய்து வந்தோம்.



இதுவரை, நகை, ஜவுளி, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கி, 30 லட்சம் ரூபாய் அளவில் ஏமாற்றியுள்ளோம். அதேபோல், சேலத்தில் முகாமிட்டு, மோசடியில் ஈடுபட களமிறங்கிய போது, போலீசார் கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.



இதுகுறித்து, போலீஸ் துணை கமிஷனர் செந்தில் கூறியதாவது:மோசடிக்கு மூளையாக, பி.காம்.,- சி.ஏ., பட்டதாரியான கண்ணன், கும்பல் தலைவனாக செயல்பட்டார். மதுபாலன் பி.காம்,- சி.ஏ., பன்னீர்செல்வம், பி.காம்., பட்டதாரிகள். ராமு, சரவணக்குமார் தவிர,

மற்றவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இதுகுறித்து, தொடர்பு கொண்டு பேசிய திண்டுக்கல் போலீசார் ஏழு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளனர். வேறு

எங்கெல்லாம், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என, தொடர் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X