குப்பை கிடங்காக மாறிய சேர்வார் ஊரணி:எதிர்ப்பால் அகற்றிய நகராட்சி ஊழியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
04:36

காரைக்குடி:காரைக்குடி சேர்வார் ஊரணியில் குப்பையை சேமித்து, குப்பை கிடங்காக மாற்றும் நகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியல் செய்ய முற்பட்டனர்.தகவல் அறிந்த துப்புரவு ஊழியர்கள் அவசரமாக குப்பையை அள்ளினர்.



காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கழனிவாசல் சாலையிலிருந்து காளியம்மன் ஆர்ச் வழியாக செல்லும் இப்பாதை அருகே, 3 மாதங்களுக்கும் மேலாக நகராட்சியினர், குப்பையை குவித்து வருகின்றனர்.



பல தெருக்களில் சேகரமாகும் குப்பையை சேர்வார் ஊரணியில் கொட்டி அதிகமானதும் அதனை குப்பை கிடங்கிற்கு மாற்றம் செய்கின்றனர்.பல நாட்களாக கொட்டப்படும் குப்பையில் மாடு, நாய்கள் மேய்ந்து கழிவுகளை ரோட்டில் பரப்புவதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு நோய் அபாயமும் உள்ளது.



பலமுறை, நகராட்சியில் இப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியினர் நேற்று மறியல் செய்ய முற்பட்டனர். தகவல் அறிந்து வந்த நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அவசர அவசரமாக நகராட்சி லாரியில் குப்பையை அள்ளி சென்றனர். அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X